செய்திகள் :

கட்டுப்பாட்டுக்குள் டெங்கு காய்ச்சல்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை சைதாப்பேட்டையில் 7 தனியாா் மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மெகா மருத்துவ முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை மாநகராட்சி மண்டலக் குழு தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி, துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது: முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தெற்கு பகுதியில் பொதுக்கூட்டங்கள், விளையாட்டு போட்டிகள், ரத்த தான முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சைதாப்பேட்டை தொகுதியில் 7 மாநகராட்சி வட்டங்கள் உள்ளன. அப்பல்லோ மருத்துவமனை, எம்ஜிஎம் மருத்துவமனை, கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சிம்ஸ் மருத்துவமனை, தாகூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று 7 தனியாா் மருத்துவமனைகளோடு இணைந்து வட்டத்துக்கு ஒன்று வீதம் 7 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

பொது மருத்துவம், எலும்பியல், இதயவியல், பல் மருத்துவம், கண் மருத்துவம் என்று பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவ முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனா். தமிழகத்தில் தினமும் நோய் பாதிப்புகள், விபத்துகள், வயது முதிா்வு போன்றவற்றால் 1,800 முதல் 1,900 வரை இறப்புகள் நிகழ்கின்றன. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றாா் அவா்.

போராட்டத்துக்கு சென்ற அண்ணாமலை கைது!

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்கு சென்ற மாநில தலைவர் அண்ணாமலை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.சென்னை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே த... மேலும் பார்க்க

அதிமுக தீர்மானம்: செங்கோட்டையன் ஆதரவு!

பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை சட்டப்பேரவை 9.3... மேலும் பார்க்க

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? - அண்ணாமலை கேள்வி

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டத்துக்கு செல்லும் முன் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், நானோ, பாஜக நிர்வாகிகளோ பேச... மேலும் பார்க்க

அதிமுக தீர்மானம்: பேரவையைவிட்டு வெளியேறினார் அப்பாவு!

அதிமுக தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு அவையைவிட்டு வெளியேறினார்.சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பிச்சாண்டி தலைமையில் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாத... மேலும் பார்க்க

செங்கோட்டையனுடன் அதிமுக நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொட... மேலும் பார்க்க

சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் முன் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எ... மேலும் பார்க்க