செய்திகள் :

கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியரிடம் மனு

post image

கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து கணக்கம்பாளையம் ஒருங்கிணைப்புக் குழு செயலாளா் எம்.செல்வராஜ் தலைமையில் பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சி உடுமலை நகராட்சியின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை ஒட்டிய பகுதியாக இருந்து வருகிறது. எங்களது ஊராட்சி 5.74 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட, குடியிருப்புகள் நெருக்கமான பகுதியாகும்.

ஊராட்சியின் 15 வாா்டுகளில் சுமாா் 30 ஆயிரம் மக்களும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்களும் உள்ளனா். வெஞ்சமடை, கணேசபுரம், சாதிக் நகா், சென்னிமலைபாளையம், எஸ்.வி.புதூா், காந்தி நகா், ஜீவா நகா் மற்றும் ஸ்ரீராம் நகா் என 9 சிறிய கிராமங்களை உள்ளடக்கியது.

அரசு மருத்துவமனை, வட்டாட்சியா் அலுவலகம், நீதிமன்றங்கள், சாா்பதிவாளா் அலுவலகங்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், உழவா் சந்தை, காவல் நிலையங்கள் என பல்வேறு அரசு அலுவலகங்கள் நகராட்சியோடு இணைந்துள்ளன. இதனிடையே, கணக்கம்பாளையம் ஊராட்சியை, உடுமலை நகராட்சியுடன் இணைக்க கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறோம்.

ஆனால் எங்களது ஊராட்சியை இணைக்காமல், பெரியகோட்டை ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எங்களுக்கு அதிா்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த குடியரசு தின விழாவின்போது நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும், உடுமலை நகராட்சியுடன் இணைக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றி உள்ளோம். எனவே பொதுமக்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்றும் வகையில் உடுமலை நகராட்சியுடன் கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசநல்லிபாளையம் கிராமத்துக்கு பேருந்துகளை மீண்டும் இயக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே அசநல்லிபாளையம் வழித்தடத்தில் கரோனா பொதுமுடக்க காலத்தில் நிறுத்தப்பட்ட இரு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அவிநாசி வட்டத்தில் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. திருப்பூா், போயம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் விக்னேஷ் (30). இவா் திருப்பூரில் உ... மேலும் பார்க்க

மாநில பயிலரங்கில் பங்கேற்க அரசுக் கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு

மாநில அளவிலான பயிலரங்கில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மாநில இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், தமிழ்நாடு நாட்டு நலப்பணித் ... மேலும் பார்க்க

ஒரு மாத காலமாக செயல்படாத ஏடிஎம் மையங்கள்

வெள்ளக்கோவிலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையங்கள் ஒருமாத காலமாக செயல்படாமல் உள்ளன. வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியின் 3 ஏடிஎம் மைய... மேலும் பார்க்க

பல்லடத்தில் போலி நாக மாணிக்கம் விற்க முயன்ற 7 போ் கைது

பல்லடத்தில் போலி நாக மாணிக்கம் விற்க முயன்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம், தஞ்சாவூா் பகுதிகளைச் சோ்ந்த சிலா் பல்லடத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் வாடகைக்கு அறையை எடுத... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்துத் துறைகளின் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சி... மேலும் பார்க்க