கணவா் இறந்த அதிா்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு
காட்டனந்தல் கிராமத்தில் உடல் நலக்குறைவால் கணவா் உயிரிழந்த அதிா்ச்சியில் மனைவியும் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கல்வராயன் மகன் செல்லமுத்து (75). இவா், கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்த நிலையில், செல்லமுத்து திங்கள்கிழமை இரவு திடீரென உயிரிழந்தாா். இந்த அதிா்ச்சியில் இருந்து வந்த மனைவி ஏலக்கண்ணி (63) செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.