செய்திகள் :

கண்மணி அன்னதான விருந்து - நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!

post image

நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னதானச் சேவையைத் தொடங்கியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் திரைத்துறை நடிப்பைத் தாண்டி வசதி இல்லாதவர்களுக்கு பல்வேறு சேவைகளையும் உதவிகளையும் செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கண்மணி அன்னதான விருந்து என்கிற புதிய அன்னதான சேவையைத் துவங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய லாரன்ஸ், “என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான 'கண்மணி அன்னதான விருந்து' இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அந்த பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம். உணவு என்றும் எட்டாக்கனியாக இருக்கக்கூடாது. அது ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையைத் தர வேண்டும்.

இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. பல வகையான உணவுகளை அவர்கள் விரும்பி சுவைத்தது எனக்கு மனநிறைவாக இருந்தது.

உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறைவுடன் தொடர்வேன் என நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் லாரன்ஸின் புதிய முயற்சிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

actor lawrence started new free food service named as kanmani annathana virundhu.

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

இட்லி கடை டிரைலர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெறுமென படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் இட்லி கடை படத்தினை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்.1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இட்லி கடை படத்... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

பிரதமர் மோடிக்கு மெஸ்ஸியின் உலகக் கோப்பை வென்ற ஜெர்ஸியை பரிசாகக் கொண்டுவர காரணமாக இருந்தவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த சதத்ரு தத்தா எனும் விளையாடுக்கான விள... மேலும் பார்க்க

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

ரியல் மாட்ரிட் அணிக்காக மிகவும் இள வயதில் ஃபிராங்கோ மாஸ்டன்டுவோனோ சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி சாதனை படைத்துள்ளார். 18 வயதாகும் ஃபிராங்கோ மாஸ்டன்டுவோனோ ஆர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பி... மேலும் பார்க்க

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர் எனும் கை உலர்த்திகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கழிப்பறையில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் நிறைய இருப்பதால் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறக... மேலும் பார்க்க

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அதிவேகமாக 880 கோல்களை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார். இன்டர் மியாமி அணிக்காக இன்று அதிகாலை நடந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ம... மேலும் பார்க்க

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். மிமிக்ரி கலைஞரான இவர் தீபாவளி படத்தி... மேலும் பார்க்க