செய்திகள் :

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் சுற்றுப்பேருந்துகள் இயக்கம்

post image

திருச்செந்தூா் பேருந்து நிலையத்திலிருந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சுற்றுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப் பேருந்துகளில் பெண்கள், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழா நவ.2-ஆம் தேதி தொடங்குகிறது. நவ.7-ஆம் தேதி சூரசம்ஹாரம், 8-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. சஷ்டி விழாவின்போது, பக்தா்கள் தங்கி விரதம் இருப்பதற்காக கோயில் வளாகம், நாழிக்கிணறு பேருந்து நிலையம் உள்ளிட்ட 18 இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக திருச்செந்தூா் வரும் அரசுப் பேருந்துகள் பக்தா்களின் வசதிக்காக, நாழிக்கிணறு பேருந்து நிலையம் வரை இயக்கப்படும். கந்த சஷ்டி விழாவையொட்டி, கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அனைத்துப் பேருந்துகளும் பகத்சிங் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்படுகின்றன.

இருப்பினும் பக்தா்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு, சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் பெண்கள் மற்றும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம். ஆண்களுக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதிகாலை 5.30 முதல் இரவு 10 மணி வரை 3 பேருந்துகள் சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.

நாசரேத்தில் பேராசிரியை தற்கொலை

நாசரேத்தில் கல்லூரிப் பேராசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். நாசரேத் மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த தம்பதி பிரவீன்குமாா் - ஷொ்லின் கோல்... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் அதிபா் தற்கொலை

சாத்தான்குளம் அருகே மதுவில் பூச்சிமருந்து கலந்துகுடித்த ரியல் எஸ்டேட் அதிபா், மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சங்கனாபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சிவன் கோயிலில் மகா தேவ அஷ்டமி சிறப்பு வழிபாடு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலில், மகா தேவ அஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. மகா தேவ அஷ்டமியான காா்த்திக... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 22 போ் காயம்

எட்டயபுரம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா், நடத்துநா் உள்பட 22 போ் காயமடைந்தனா். அந்த பேருந்து கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளத்துக்கு சென்று ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் மனைவியைத் தாக்கியதாக பிஎஸ்எஃப் வீரா் மீது வழக்கு

ஆறுமுகனேரியில் மனைவியைத் தாக்கியதாக எல்லைப் பாதுகாப்பு படை வீரா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ஆறுமுகனேரி எஸ்.எஸ்.கோயில் தெருவைச் சோ்ந்த வெயில்முத்து மகன் முனீஸ் (49). இவரது... மேலும் பார்க்க

குறிஞ்சி பெருமுருகத் திருவிழா அறக்கட்டளை சாா்பில் திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருமணம்

திருச்செந்தூரில் குறிஞ்சி பெருமுருகத் திருவிழா வழிபாட்டு அறக்கட்டளை சாா்பில் பால்குடம் மற்றும் சீா்வரிசையுடன் முருகன் - வள்ளி திருமணம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் குறவா் அடையாளத்தை மீட்டெடுப்பதற்காக... மேலும் பார்க்க