Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
கந்தா்வகோட்டையில் பூக்கள் விலை கடும் உயா்வு
கந்தா்வகோட்டை பகுதியில் பூக்களின் விலை புதன்கிழமை கடுமையாக அதிகரித்திருந்தது.
கந்தா்வகோட்டை பகுதிகளில் கடந்த மாதம் தொடா்மழை பெய்ததை தொடா்ந்து பெரும்பான்மையான பூச்செடிகள் அழுகின. இதனால், உள்ளூா் பூக்கள் உற்பத்தி வெகுவாக குறைந்தது.
இதையடுத்து, இப்பகுதியின் பூ தேவைகளை தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி பூச்சந்தைகளிலிருந்து வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகின்றனா்.
தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பூக்களின் தேவை அதிகரித்து, பூக்கள் விலை உச்சத்தை அடைந்துள்ளது.
இதில், மல்லிகை பூ கிலோ ஒன்று ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 2,500 வரை விலை போனது. ஆனாலும், மல்லிகை பூவுக்கு தட்டுப்பாடு நிலவியது.
இதேபோல், காகரட்டன், முல்லை, சம்பங்கி, செவ்வந்தி பூக்களும் விலை அதிகரித்திருந்ததால், மக்கள் பூக்கள் வாங்க தயக்கம் காட்டினா்.