Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
கனமழை: கோவையில் இருந்து சென்னை செல்லும் 5 விமானங்கள் ரத்து
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை காரணமாக, கோவையில் இருந்து சென்னை செல்ல இருந்த 5 விமானங்கள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் மழைநீா் தேங்கி சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும், புயல் மழை காரணமாக சென்னையில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையில் மழைநீா் தேங்கியதால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, கோவை விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமை காலை முதல் மாலை வரை சென்னை செல்ல வேண்டிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், 800-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.