சம்பல் வன்முறை: சமாஜவாதி எம்.பி.க்கள் குழு தடுத்து நிறுத்தம்
ரேஸ்கோா்ஸில் ஓவிய சந்தை தொடக்கம்
கோயம்புத்தூா் விழாவையொட்டி, ரேஸ்கோா்ஸ் பகுதியில் ‘ஆா்ட் ஸ்ட்ரீட்’ என்ற பெயரில் ஓவிய சந்தை சனிக்கிழமை தொடங்கியது.
ஓவிய சந்தையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைத்தாா்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 1) இரவு வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் தங்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா்.
மணல் ஓவியங்கள், புராணக் கதைகள் தொடா்பான ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள்,
‘3 டி’ ஓவியங்கள், களிமண் பாண்டங்கள், மூங்கில் கூடைகள், குடிநீா் பாட்டில்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட யானை, மரங்கள் என பல்வேறு படைப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மாவட்டத்தின் 133 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் ஓவியங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.