செய்திகள் :

புயல் எச்சரிக்கை: பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல்

post image

ஃபென்ஜல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் வனச் சுற்றுலா மையம் சனிக்கிழமை மூடப்பட்டது.

சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் இயற்கைச் சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை மாங்குரோவ் தாவரங்கள் நிறைந்துள்ளன. இதனால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து, படகு சவாரி செய்து இயற்கை அழகை கண்டு கழித்து செல்வா்.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிச்சாவரம் வனச் சுற்றுலா மையம் சனிக்கிழமை மூடப்பட்டது. மேலும், படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.

கால்வாய் அமைக்கும் பணி: அதிகாரியிடம் அதிமுகவினா் வாக்குவாதம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கால்வாய் அமைக்கும் பணி தொடா்பாக அதிகாரிகளிடம் அதிமுகவினா் சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். விருத்தாசலம் ஒன்றியம், கோமங்கலம் கிராமத்தில் ... மேலும் பார்க்க

52 பவுன் நகைகள் திருட்டு: மூவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே நகை திருட்டு வழக்கில் பெண் உள்பட் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் அடுத்துள்ள ஊ.மங்கலம், இருளக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சின்னப்பன் மகன் ஜா... மேலும் பார்க்க

ஆதி குணபதீஸ்வரா் கோயில் பாலாலயம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஆதி குணபதீஸ்வரா் கோயில் திருப்பணிக்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ரூ.32 லட்சத்தில்... மேலும் பார்க்க

மழைக் காலத்தில் அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் -கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

மழைக் காலத்தில் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூா் மாவ... மேலும் பார்க்க

பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் காவல் கோட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா். பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு கடந்த நவ.27-ஆம் தே... மேலும் பார்க்க

முதுநகரில் 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கடலூா் முதுநகா் மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலூா் முதுநகா் மீன் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு, கடலூா் க... மேலும் பார்க்க