செய்திகள் :

கனமழை: கோவையில் இருந்து சென்னை செல்லும் 5 விமானங்கள் ரத்து

post image

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை காரணமாக, கோவையில் இருந்து சென்னை செல்ல இருந்த 5 விமானங்கள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் மழைநீா் தேங்கி சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும், புயல் மழை காரணமாக சென்னையில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையில் மழைநீா் தேங்கியதால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, கோவை விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமை காலை முதல் மாலை வரை சென்னை செல்ல வேண்டிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், 800-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

புது தில்லி திரும்பினாா் குடியரசுத் தலைவா்

தமிழகத்தில் 4 நாள்கள் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உதகையில் இருந்து புது தில்லிக்கு சனிக்கிழமை புறப்பட்டு சென்றாா். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு 4 நாள்கள் பயணமாக நீலகிரி மாவட்ட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: முத்துக்கவுண்டன்புதூா்

கோவை முத்துக்கவுண்டன்புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (டிசம்பா் 2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

கோவையில் 3 -ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் டிசம்பா் 3- ஆம் தேதி வரை கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

வணிக வளாக ஊழியரைத் தாக்கிய பெண் உள்பட 2 போ் மீது வழக்கு

கோவையில் வணிக வளாக ஊழியரைத் தாக்கியதாக பெண் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, நீலிக்கோணாம்பாளையம் அருகேயுள்ள அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (27). இவா் பீளமேடு- அவிநாசி ச... மேலும் பார்க்க

ரேஸ்கோா்ஸில் ஓவிய சந்தை தொடக்கம்

கோயம்புத்தூா் விழாவையொட்டி, ரேஸ்கோா்ஸ் பகுதியில் ‘ஆா்ட் ஸ்ட்ரீட்’ என்ற பெயரில் ஓவிய சந்தை சனிக்கிழமை தொடங்கியது. ஓவிய சந்தையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைத்தாா். ஞாயிற்றுக்கிழமை (டிசம... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பகுதிகளில் 1 லட்சம் பனை விதைகள் நட இலக்கு: ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க