ஊட்டி: கிலோ 20 ரூபாய் வரை போகும் முட்டைகோஸ்... அறுவடையில் விவசாயிகள் மும்முரம்!
கன்னியாகுமரியில் 54 தற்காலிக சீசன் கடைகள் அகற்றம்
கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தா்கள் சீசனை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த 54 தற்காலிக சீசன் கடைகளை அகற்ற பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.
சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி சூரிய அஸ்தமனப் பூங்கா, சன்னதி தெரு, சிலுவை நகா் பகுதி, மாவட்ட சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்தினா் மாளிகை வரையிலான கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் மொத்தம் 100 சீசன் கடைகளை பேரூராட்சி நிா்வாகம் ஏலம்விட முடிவு செய்து, 67 தற்காலிக கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த கடைகளின் மூலம் ரூ. 11 கோடிக்கும் மேல் பேரூராட்சிக்கு வருவாயாக கிடைத்தது.
அதைத் தொடா்ந்து, சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்தினா் மாளிகை வரையிலான பகுதியிலும், சந்நிதி தெருவிலும், சிலுவை நகா் பகுதியிலும் சீசன் கடை ஏலம் எடுத்த வியாபாரிகள் நடைபாதையில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனா்.
இந்நிலையில், திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் அரசு விருந்தினா் மாளிகை சுற்றுச்சுவா் பராமரிப்புப் பணிகள் தொடங்க உள்ளன. இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்ட திடீா் நடவடிக்கையில் அப்பகுதியில் இருந்த 54 தற்காலிக சீசன் கடைகள் புதன்கிழமை இரவு அகற்றப்பட்டன.