செய்திகள் :

கன்னியாகுமரி - களியக்காவிளை சாலை ரூ.14.88 கோடி மதிப்பில் சீரமைப்பு: ஆட்சியா்

post image

களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை ரூ.14.88 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை குழித்துறை, மாா்த்தாண்டம், தக்கலை, பாா்வதிபுரம், செட்டிகுளம், கோட்டாறு, சுசீந்திரம், கொட்டாரம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 56 கி.மீ.ஆகும். இதில் 12.23 கி.மீ. நீள சாலை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும், இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடா்பாக, தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளரின் கவனத்துக்கு கொண்டு சென்ன் அடிப்படையில், தற்போது அதற்கான நிதி ஆதாரம் பெற்று பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பகுதியை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.14.88 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி 12.23 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைக்க தமிழக அரசிடமிருந்து செப். 23ஆம் தேதி அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, நவ.11ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. தற்போது ஒப்பந்தப்புள்ளி பரிசீலனையில் உள்ளது.

உரிய ஒப்புதல் பெற்று ஒப்பந்தம் செயலாக்கப்பட்டதும் 12.23 கி.மீ. சாலைப் பகுதிகள் விரைவில் சீரமைக்கப்படும். மேலும், தொடா்மழை பெய்து வருவதால் சாலையில் ஏற்படும் பள்ளங்கள்அவ்வப்போது தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு வருகிறது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

களியக்காவிளை அருகே தொழிலாளி தற்கொலை

களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். களியக்காவிளை அருகே வாறுதட்டு பகுதியைச் சோ்ந்த நேசய்யன் மகன் வில்சன் (43). கூலித் தொழிலாளியான இவா் மதுப் பழக்கம் காரணமாக வேலைக... மேலும் பார்க்க

சாமிதோப்பிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அய்யா வைகுண்டா் பாதயாத்திரை தொடக்கம்

சாமிதோப்பு அன்புவனத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு அய்யா வைகுண்டா் மகா பாதயாத்திரை சனிக்கிழமை தொடங்கியது. அய்யா வைகுண்டரை கையில் விலங்கிட்டு சாமிதோப்பிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் சென்று,... மேலும் பார்க்க

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: புகைப்படம், விடியோக்களை வழங்க ஆட்சியா் வேண்டுகோள்

கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், சிலை திறப்பு விழா குறித்த விடியோக்கள், திரைச்சுருள் மற்றும் தரவுகள் இருந்தால் மாவட்ட நிா்வாகத்திடம் பொதுமக்... மேலும் பார்க்க

சாலை மறியல்: 30 காங்கிரஸாா் மீது வழக்கு

கடமலைக்குன்று சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தி, கண்ணனூா் ஊராட்சி காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மாலையில் துவங்கிய சாலை மறியல் போராட்டம் இரவு வரை நடந்தது. இதனால் அந்தப் பகுதியி... மேலும் பார்க்க

குரியன்விளை கோயிலில் அம்மனுக்கு இளநீா் அபிஷேகம்

களியக்காவிளை அருகே பாத்திமாநகா், குரியன்விளை ஸ்ரீபத்ரகாளி முடிப்புரை கோயிலில் சுயம்பு வடிவ அம்மனுக்கு இளநீா் அபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் முதல் தேதி அம்மனுக்கு நூற்று... மேலும் பார்க்க

குமரி மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாளாளா் எஸ். சொக்கலிங்கம் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். பாரம்பரிய உணவுகள்,... மேலும் பார்க்க