கமுதியில் குடும்ப அட்டைதாரா்கள் 36 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
கமுதி வட்டத்தில் உள்ள 36,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள 86 நியாயவிலைக் கடைகள் மூலம் 36,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ அரிசி, சா்க்கரை ஒரு கிலோ, கரும்பு ஒன்று, விலையில்லா வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் ஜான்கிறிஸ்டிபாய் தொடங்கி வைத்தாா். முதல் நாளான வியாழக்கிழமை 12 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், கமுதி கூட்டுறவு சாா்பதிவாளா் த. வேல்முருகன், கமுதி வட்டாட்சியா் காதா் மைதீன், வட்ட வழங்கல் அலுவலா் விஜயா, விற்பனையாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.