கம்பத்தில் சுகாதார வளாக கட்டடங்கள் திறப்பு
கம்பம் நகராட்சியில் ரூ.1.13 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 4 சுகாதார வளாகக் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கம்பம் நகராட்சியில் ரூ.1.13 கோடியில் 1-ஆவது வாா்டு கோம்பை சாலை, 21-ஆவது வாா்டு பழைய பேருந்து நிலையம், 26, 30-ஆவது வாா்டு பகுதிகளில் 4 சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.
இந்த கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கம்பம் நகா் மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் திறந்து வைத்தாா்.
இதில் துணைத் தலைவா் சுனோதா, நகராட்சி ஆணையா் பாா்கவி(பொறுப்பு), பொறியாளா் அய்யனாா், உதவிப் பொறியாளா் சுரேஷ்குமாா், சுகாதார அலுவலா் அரசக்குமாா், வாா்டு உறுப்பினா்கள், நகாராட்சி பணியாளா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.