செய்திகள் :

கம்யூனிசம் குறித்த ஆ.ராஜா பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்

post image

“கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப் போய் விட்டது” என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜன.7) நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப் போய் விட்டது” என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் தத்துவத்தின் மீது தலைவர்கள் வைக்கும் நம்பிக்கை குறைந்து விட்டது என்ற அவதூறுச் செய்தியை ஆதாரமாக காட்டுகிறார்.

கடந்த 1989-90 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ந்ததும், இதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்களும் உலகளாவிய முக்கிய நிகழ்வகளாகும். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர கம்யூனிஸ்ட் கட்சிகளும் விரிவான ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக வெளியிட்டுள்ளன. இவைகளை ஆ.ராசா சார்பு நிலை தவிர்த்து கற்றறிந்து பேச வேண்டும்.

“கம்யூனிசம் பிறந்த இடத்திலேயே செத்து விட்டது” “முதலாளித்துவத்துக்கு மாற்று இல்லை” என்று தத்துவ எதிரிகள் கொக்கரித்துக் கொண்டிருந்த வேளையில், கலைஞர் “சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்டது தோல்வி அல்ல; அது தற்காலிக பின்னடைவு மட்டுமே” என்று கூறியதை ஆ.ராசா தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகளின் நேர்மையை, எளிமையை, தன்னல மறுப்பை, பொதுநல வேட்கையை, போராட்ட குணத்தை வர்க்க எதிரிகளும் ஒப்புக் கொள்வதை நாடறியும் என்பதை ஆ.ராசாவும் அறிந்திருக்க வேண்டும். போகிற போக்கில் “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டும் ஆ.ராசா, அவர் கண்டறிந்த கம்யூனிஸ்டு சுயநலவாதிகள் பட்டியலை வெளியிட வேண்டும்.

இதையும் படிக்க |இஸ்ரோ பணி அனைவரது கூட்டுப் பணி: வி.நாராயணன்

கம்யூனிசம் என்பது வறட்டு தத்துவம் அல்ல, அது மனித குலம் நிறைவாக, நீடித்த அமைதியும், நிரந்தர சமாதானமும் நிலவும் முற்றிலும் புதுமையான சமூக அமைப்பில் வாழும் வாழ்க்கை முறை பற்றிய சமூக விஞ்ஞானம்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு தான் மனிதகுல வரலாறாகும். இதில் இயற்கை நிலை சமூகம் படிப்படியாக மாறி இன்று நிதி மூலதனமும், குழும நிறுவனங்களுமாக ஆதிக்கம் செலுத்தும் உச்சபட்ச ஏகாதிபத்திய சமுக அமைப்பாக வளர்ந்து, மீள முடியாத நெருக்கடியில் சிக்கி, சாவில் இருந்து தப்பித்துக் கொள்ள துடிக்கும் நோயாளியாக தவித்து வருகிறது.

சமூக நோயை குணப்படுத்தும் கம்யூனிசம் வெல்லும் எனும் காட்சியை ஆ.ராசாவும் காணும் காலம் வரும்.

உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் பட்டியலின சமூகத்தில் இருந்து தலைவர்களை உருவாக்கி, நாடறிய உயர்த்தி பிடித்த கம்யூனிஸ்டுகள் மீது, இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி தேடி, தேர்வு செய்யும் நிலையில் இருக்கும் பகுத்தறிவாளர்கள் குற்றம் சாட்டுவது பொறுப்பற்ற செயலாகும். இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவது உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். “யாகாவாராயினும் நாகாக்க” என்று கூறியுள்ளார்.

கிங்ஸ்டன் பட டீசர்!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி - 25 படத்தை கமல் ... மேலும் பார்க்க

பொங்கல்: ஜன. 10 - 13 வரை கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு, 10.01.2025 முதல் 13.012025 வரை கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.14.01.2025 பொங்கல் பண்டிகையை முன்னிட... மேலும் பார்க்க

பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு: சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்... மேலும் பார்க்க

மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: முதல்வர்

மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று யுஜிசியின் புதிய விதிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் யுஜிசியின் புதிய விதிகளுக்கு ... மேலும் பார்க்க

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? - ரோஜா கேள்வி

திருப்பதி: திருப்பதியில் நடந்த சம்பவம் அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட நெரிச்சலால் ஏற்பட்ட தற்செயல் நிகழ்வாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ரோஜா, இந்த இந்த விவ... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: இலவச இணையசேவை வழங்கும் எலான் மஸ்க்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையூறின்றி இணையசேவை வழங்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார்.அமெரிக்காவின் கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சலீஸ் வறண்ட பகுதியில் ஏற்பட்ட காட்... மேலும் பார்க்க