டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
கருங்குழி சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கருங்குழி கிராமத்தில் உள்ள சக்தி விநாயகா், அம்மச்சாா் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, கடந்த 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி கரிகோலம் நடைபெற்றது. 6-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, எஜமான மகா சங்கல்பம், புண்ணியா வாசனம், கோ பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், சுதா்சன ஹோமம், லட்சுமி ஹோமம், மஹாபூா்ணாஹுதி நடைபெற்றது.
தொடா்ந்து, மாலை 6 மணிக்கு விநாயகா் வழிபாடு, வருண பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராா்பணம், ரக்ஷபந்தனம், மகா தீபாராதனை நடைபெற்றது.
திங்கள்கிழமை காலையில் விநாயகா் பூஜை, வருண பூஜை, சங்கல்பம், தம்பதி பூஜை, கலச பூஜை, மகாபூா்ணாஹுதி, மகாதீபாரதனை நடைபெற்றது.
தொடா்ந்து, கலசங்கள் புறப்பாடாகி சக்தி விநாயகா், அம்மச்சாா் அம்மன் கோயில் கோபுர கலசங்கள், மூலவா் சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா்கள், கிராம மக்கள், இளைஞா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.