செய்திகள் :

`கருப்பு பட அப்டேட்; மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' -ஆர்.ஜே பாலாஜி

post image

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’.

இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. 'கட்சி சேர', 'ஆச கூட' போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபயங்கர் 'கருப்பு' படத்திற்கு இசையமைக்கிறார். தீபாவளியை முன்னிட்டு கருப்பு படத்தின் 'God Mode' பாடல் வெளியாகி சூர்யா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, "நல்ல வாய்ப்புகள் நிறைய கிடச்சிருக்கு. அதுக்கெல்லாம் நன்றி சொல்லதான் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வந்தேன்.

'கருப்பு' படம் நல்லபடி வந்திருக்கு. படத்தோடு 80% பணிகள் முடிஞ்சது. விரைவில் ஒரு நல்ல தேதியைப் பார்த்து ரிலீஸ் பண்ணுவோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வரும்.

ஆர்.ஜே பாலாஜி

'மூக்குத்தி அம்மன் -2' படத்தை சுந்தர் சி சார் இயக்குகிறார். அதே நயன்தாரா நடிக்கிறார். அந்தப் படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அந்தப் படத்தை ஆரம்பிக்கும் போதே எங்கிட்ட சொல்லிட்டுதான் ஆரம்பிச்சாங்க. எந்தப் பிரச்னையுமில்லை. அவர்களுக்கு என் வாழ்த்துகள்" என்றார்.

``குறைகளை ஏன் கவனிக்க மறுக்கிறீர்கள் நிதின் கட்கரி சார்?" - டீசல் பட இயக்குநரின் ஆதங்கப் பதிவு

ஹைதராபாத்திலிருந்து பெங்களூர் சென்றுகொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது கொண்டிருந்தது.இந்தப் பேருந்தில் 40 பயணிகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 3.3... மேலும் பார்க்க

What to Watch: சக்தி திருமகன், ஓஜி - இந்த வார ரிலீஸாகியிருக்கும் படங்கள்!

Ek Deewane Ki Deewaniyat - இந்திகடந்த அக்டோபர் 21 - செவ்வாய்க்கிழமை அன்று இந்த இந்தி திரைப்படம் வெளியானது. நடிகர்கள் ஹர்ஷவர்தன் ரானே, சோனம் பாஜ்வா ஆகியோரது நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை இயக்குநர் ப... மேலும் பார்க்க

Ajith Kumar: பாலக்காடு பகவதி கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம் - Family க்ளிக்ஸ்!

Ajith - Shalini - AadhvikAjith - Shalini - AadhvikAjith - Shalini - AadhvikAjith - Shalini FamilyAjith - ShaliniAjith - ShaliniAjith - ShaliniAjith: "சென்னைக்கு வரியா..." - பூனையிடம் க்யூட்டாக பேசிய அ... மேலும் பார்க்க

"நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த படம் 'பைசன்'; உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி" - வைகோ வாழ்த்து

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'பைசன்' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ்... மேலும் பார்க்க

`வெடிக்கும் பைசன்; துருவ்-ன் மறக்க முடியாத நடிப்பு' - பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'பைசன்' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ்... மேலும் பார்க்க