கரூர் பலி: முதல்வரிடம் தொலைபேசியில் விசாரித்த ராகுல் காந்தி!
கரூர் பலி: அனைத்து உடல்களும் ஒப்படைப்பு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 40 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசார பயணம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு, 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்தபோது, அவரைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அவர் இரவு 7 மணியளவில் பேசத் தொடங்கியபோது, ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்தபடி கூட்டம் அலைமோதியது. இதில் கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று பலியாகினர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிசைப் பெற்று வருகின்றனர்.
கரூர் பலி 40ஆக உயர்வு
தீவிர சிகிச்சைப் பிரிவியில் அனுமதிக்கப்பட்டிருந்த கவின்(31) என்பவர் சிகிச்சைப் பலனின்றி இன்று பலியானார். இதையடுத்து இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 40 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.