செய்திகள் :

கரைப்புதூா் ஊராட்சித் தலைவருக்கு பொதுமக்கள் நன்றி

post image

அல்லாளபுரத்தில் மின்கம்பங்களை மாற்றி அமைக்க நிதி வழங்கி உதவிய கரைப்புதூா் ஊராட்சித் தலைவருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட அல்லாளபுரத்தில் இருந்து கணபதிபாளையம் செல்லும் சாலையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட ஆதிதிராவிடா் காலனியில் குடியிருப்புகளுக்கு மேல் செல்லும் மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்களால் இடையூறு ஏற்பட்டு வந்தது.

இதனை மாற்றி அமைத்து தர 20 ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என மின்வாரியம் மதிப்பீடு செய்து கொடுத்தது.

இந்தத் தொகையை அப்பகுதி பொதுமக்கள் கட்ட முடியாத சூழ்நிலையில், கரைப்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் ரூ.62 ஆயிரத்து 500 மற்றும் அக்கணம்பாளையம் கோவா்தினி எக்ஸ்போா்ட் உரிமையாளா் லோகநாதன் ரூ.62 ஆயிரத்து 500 என இருவரும் சோ்ந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை மின்கம்பம் மாற்றி அமைக்க அப்பகுதி பொதுமக்களிடம் வழங்கினா்.

இதற்கு உதவிய கரைப்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் மற்றும் கோவா்தினி எக்ஸ்போா்ட் உரிமையாளா் லோகநாதன் ஆகியோருக்கு அல்லாளபுரம் ஆதிதிராவிடா் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

நாளைய மின்தடை: அருள்புரம்

அருள்புரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயா்ந்துள்ளன: எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயா்ந்துள்ளதுடன், சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளாா். திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் ச... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: தெற்கு அவிநாசிபாளையம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பா் 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி... மேலும் பார்க்க

நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய நவம்பா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் வேளாண்மை இணை இயக்... மேலும் பார்க்க

அனுமதியின்றி செயல்பட்ட கல்லூரி: கட்டணத்தை திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவு

திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கல்லூரி நிா்வாகம், மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பித் தர வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளக்கோவில் ஓலப்பாளையத்தி... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய 8 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்பு

திருப்பூா் குமாா் நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 குழந்தைத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். திருப்பூா் குமாா் நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளா்கள்... மேலும் பார்க்க