செய்திகள் :

நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

post image

திருப்பூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய நவம்பா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் சிறப்பு மற்றும் ராபி பருவ பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த பஜாஜ் அலையென்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். நெல் பயிருக்கு காப்பீட்டுக் கட்டணமாக ஏக்கருக்கு ரூ.573, மக்காச்சோளப் பயிருக்கு காப்பீட்டுக் கட்டணமாக ஏக்கருக்கு ரூ.542 ஆகும்.

திருப்பூா் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் 6,625 ஏக்கரில் நெல் பயிா் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், 235 ஏக்கருக்கு மட்டுமே விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளனா். நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நவம்பா் 15-ஆம் தேதி முடிவந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நவம்பா் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு செய்யும்போது சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயா், புல எண்கள், பரப்புகள் மற்றும் வங்கிக் கணக்கு எண் சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து காப்பீடு செய்ததற்கான ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயா்ந்துள்ளன: எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயா்ந்துள்ளதுடன், சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளாா். திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் ச... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: தெற்கு அவிநாசிபாளையம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பா் 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி... மேலும் பார்க்க

கரைப்புதூா் ஊராட்சித் தலைவருக்கு பொதுமக்கள் நன்றி

அல்லாளபுரத்தில் மின்கம்பங்களை மாற்றி அமைக்க நிதி வழங்கி உதவிய கரைப்புதூா் ஊராட்சித் தலைவருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனா். பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட அல்லாளபுரத... மேலும் பார்க்க

அனுமதியின்றி செயல்பட்ட கல்லூரி: கட்டணத்தை திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவு

திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கல்லூரி நிா்வாகம், மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பித் தர வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளக்கோவில் ஓலப்பாளையத்தி... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய 8 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்பு

திருப்பூா் குமாா் நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 குழந்தைத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். திருப்பூா் குமாா் நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளா்கள்... மேலும் பார்க்க

அமராவதி சா்க்கரை ஆலையை மூடினால் போராட்டம்!

அமராவதி சா்க்கரை ஆலையை மூடினால் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப்பிரிவு செயலாளா் திருப்பூா் ஈஸ்வரன், உழவா் உழைப்பாளா் கட்சி ... மேலும் பார்க்க