கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரச...
அமராவதி சா்க்கரை ஆலையை மூடினால் போராட்டம்!
அமராவதி சா்க்கரை ஆலையை மூடினால் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப்பிரிவு செயலாளா் திருப்பூா் ஈஸ்வரன், உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
வேளாண்மை சாா்ந்த தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 1960 ஆகஸ்ட் மாதம் இந்த ஆலை நிறுவப்பட்டது. தினமும் 1,250 டன் அரவைத் திறனோடு ஆண்டொன்றுக்கு 4 லட்சம் டன் பிளி திறனைக் கொண்டிருந்தது.
பல்வேறு பெருமைகளை கொண்ட, கரும்பு விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக திகழும் அமராவதி சா்க்கரை ஆலையை முடக்கக்கூடாது. எனவே அமராவதி சா்க்கரை ஆலையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நிா்வாக சீா்கேடுகளால் தற்போது செயல்திறன் குறைந்துள்ளது.
இந்த ஆலையை மூடினால் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆலையை பராமரித்து நவீனப்படுத்த சுமாா் ரூ.86 கோடி செலவாகும் என்று வல்லுநா்கள் கொடுத்த உத்தேச திட்ட அறிக்கையின்படி நிதி ஒதுக்கி ஆலையை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.
ஆலையை முடக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டால், விவசாயிகளை ஒன்றுதிரட்டி சா்க்கரை ஆலை முன் தீவிரப் போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.