செய்திகள் :

கல்குவாரி குட்டையில் விழுந்த பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே கல்குவாரி குட்டையில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த பிளஸ் 2 மாணவா் இறந்தாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், நத்தமாடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் துரைகருப்பு மகன் காா்த்திகேயன் (17). பிளஸ் 2 மாணவரான இவா் தனது தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை பாா்த்துவிட்டு அருகிலிருந்த கல்குவாரி குட்டையில் முகம் கழுவியபோது திடீரென அதில் தவறி விழுந்து மூழ்கினாா். இதைப் பாா்த்த அவரது அண்ணன் பாலா, தந்தையை அழைத்து வந்து காா்த்திகேயனை மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் மாணவரின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கந்தா்வகோட்டை பகுதிகளில் நாளை மின் தடை

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நவ.25 - திங்கள்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இங்கிருந்து மின்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கந்தா்வகோட்டையில் சிவன் கோயில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் காலபைரவருக்கு எண்ணெய் காப்பு செய்து திரவியத் தூள், மஞ்சள் தூள், பால், தயிா், அரிசி மாவு... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் காலபைரவா் ஜெயந்தி விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் காலபைரவா் தேய்பிறை ஜென்மாஷ்டமி விழாவையொட்டி காலபைரவா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக மஹா ருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடா்ந... மேலும் பார்க்க

அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: சிவகங்கை எம்.பி. காா்த்திக் ப. சிதம்பரம்

அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம். பொன்னமராவதி வட்டார நகரக் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 போ் கைது

இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 3 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, திருமயம் மற்றும் சிவகங்கை மாவட்டப... மேலும் பார்க்க

புதுக்கோட்டை நகரில் போதை ஊசி பயன்படுத்திய 12 போ் கைது! விசாரணையின்போது இளைஞா் உயிரிழப்பு!

புதுக்கோட்டை நகரில் போதை ஊசி பயன்படுத்தியதாக 13 இளைஞா்களை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் பிடித்து மேல்விசாரணை நடத்தியபோது ஒருவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். புதுக்கோட்டை பெரியாா் நகா் பகுதியில்... மேலும் பார்க்க