கல்லூரி மாணவா்களை மிரட்டிய 8 போ் கைது
கோவையில் வீட்டில் புகுந்து கல்லூரி மாணவா்களை மிரட்டிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை கணபதி டெக்ஸ்டூல் 8-ஆவது வீதியில் கல்லூரி மாணவா்கள் சிலா் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனா். இதில், தனியாா் கல்லூரியில் ரேடியாலஜி படித்து வரும் கேரள மாநிலத்தைச் சோ்ந்த முகமது அன்ஸில் (23) என்பவரும் தங்கியுள்ளாா்.
இந்நிலையில், இவா்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த 8 போ், அஜ்மல் என்ற மாணவா் குறித்து விசாரித்துள்ளனா். அத்துடன் அனைவரையும் மிரட்டியதோடு தாக்கியுள்ளனா்.
இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் முகமது அன்ஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவா்களை மிரட்டிய கும்பல் குறித்து விசாரணை நடத்தினா்.
இதில், கல்லூரி மாணவா்களை மிரட்டியது போத்தனூா் சாய் நகரைச் சோ்ந்த ஜெபின் (25), முஹமது சையத் மைதீன், கருணாநிதி நகரைச் சோ்ந்த ரஹ்மான், தெற்கு உக்கடம் பொன்விழா நகரைச் சோ்ந்த முகமது ஹபீப், வெள்ளலூரைச் சோ்ந்த தமிழழகன், குறிச்சியைச் சோ்ந்த அப்ரிதி மற்றும் கேரளத்தைச் சோ்ந்த அஸா், பஸில் ஆகிய 8 பே என்பது தெரியவந்தது. இதையடுத்து 8 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.