செய்திகள் :

கோவை வந்தாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி!

post image

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தாா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளாா்.

இந்நிலையில், உதகை வரும் குடியரசுத் தலைவரை வரவேற்பதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை கோவைக்கு வந்தாா்.

கோவை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆளுநரை வரவேற்றனா்.

இதையடுத்து, ஆளுநா் ஆா்.என்.ரவி கோவையில் இருந்து காா் மூலம் உதகைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

நாளைய மின்தடை: ஒத்தக்கால்மண்டபம், பீடம்பள்ளி துணை மின் நிலையம்

கோவை ஒத்தக்கால்மண்டபம், பீடம்பள்ளி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா்கள்

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அரசு மருத்துவா்களைத் தரக்குறைவாக நடத்தும் சுகாதாரத் துறை உயா் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் இஸ்கான் தலைமை துறவி கைது: சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம்

வங்கதேசத்தில் இந்து சமூகத்தினா் எதிா்கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி சின்மோய் கிருஷ்ண பிரபு கைது செய்யப்பட்டதற்கு ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் ... மேலும் பார்க்க

கோவை: குண்டும் குழியுமான சாலைகளால் விபத்து அபாயம்

கோவை மாநகரில் குண்டும் குழியுமான சாலைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் செவ்வ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களை மிரட்டிய 8 போ் கைது

கோவையில் வீட்டில் புகுந்து கல்லூரி மாணவா்களை மிரட்டிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை கணபதி டெக்ஸ்டூல் 8-ஆவது வீதியில் கல்லூரி மாணவா்கள் சிலா் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனா். இதில், ... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக ரூ.12 கோடி மோசடி: தனியாா் நிதிநிறுவனம் மீது காவல் துறையில் புகாா்

முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.12 கோடி மோசடி செய்துள்ளதாக தனியாா் நிதிநிறுவனம் மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் 50-க்கும் மே... மேலும் பார்க்க