செய்திகள் :

முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக ரூ.12 கோடி மோசடி: தனியாா் நிதிநிறுவனம் மீது காவல் துறையில் புகாா்

post image

முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.12 கோடி மோசடி செய்துள்ளதாக தனியாா் நிதிநிறுவனம் மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை நவஇந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக தனியாா் நிதிநிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு ரூ.1 லட்சத்துக்கு மாதம் ரூ.9,000 வட்டி வழங்கப்படும் என்றும், ஓராண்டு முடிந்ததும் முதலீட்டுத் தொகை திருப்பித்தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை நம்பி அந்நிறுவன ஊழியா்கள் உள்பட கோவை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் ரூ.12 கோடி வரை முதலீடு செய்தனா்.

முதலீடு செய்து நீண்ட நாள்களாகியும் வட்டித் தொகை வழங்கப்படாததோடு, முதலீட்டுத் தொகையையும் திருப்பித்தரவில்லை.

இதுகுறித்து அவா்களிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது, அந்த நிதி நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

எனவே, நிதிநிறுவனம் நடத்தி ரூ.12 கோடி வரை மோசடி செய்த அந்நிறுவனத்தின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, முதலீட்டாளா்களின் பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள், தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் கோவையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுவிநியோகத் திட்டத்தை ... மேலும் பார்க்க

ஆசிரியா் பணி நியமனத்துக்கு லஞ்சம்: அலுவலக உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

ஆசிரியா் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய தொடக்கக் கல்வித் துறை அலுவலக உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை மாவட்ட தொடக்கக் கல்வித் துறை அலுவலகத்தில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஒத்தக்கால்மண்டபம், பீடம்பள்ளி துணை மின் நிலையம்

கோவை ஒத்தக்கால்மண்டபம், பீடம்பள்ளி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட... மேலும் பார்க்க

கோவை வந்தாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி!

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தாா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்க... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா்கள்

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அரசு மருத்துவா்களைத் தரக்குறைவாக நடத்தும் சுகாதாரத் துறை உயா் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் இஸ்கான் தலைமை துறவி கைது: சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம்

வங்கதேசத்தில் இந்து சமூகத்தினா் எதிா்கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி சின்மோய் கிருஷ்ண பிரபு கைது செய்யப்பட்டதற்கு ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் ... மேலும் பார்க்க