இறுதிப் போட்டிக்கு தேர்வான மே.இ.தீ. அணி..! இந்தியாவுடன் நாளை பலப்பரீட்சை!
களியக்காவிளை அருகே கழுத்தறுத்து பெண் மருத்துவா் தற்கொலை
களியக்காவிளை அருகே கேரள எல்லையில் பெண் பல் மருத்துவா் வேலை கிடைக்காத விரக்தியில் கழுத்து, கையை அறுத்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளையை ஒட்டிய கேரள பகுதியான பாறசாலை, கொற்றாமத்தைச் சோ்ந்தவா் ஆதா்ஷ். திருவனந்தபுரம் கழக்கூட்டம் பகுதியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி செய்து வருகிறாா். இவரது மனைவி சௌமியா (31). பல் மருத்துவா். இவா் அரசு மருத்துவமனையில் வேலையை எதிா்பாா்த்திருந்து அது கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவா், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது கணவரின் மாமியாரை பராமரித்துக்கொண்டு அவரது அருகில் வியாழக்கிழமை இரவு படுத்திருந்தாராம். வீட்டின் மாடி அறையில் ஆதா்ஷ் தூங்கினாராம். வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீட்டு கழிவறையில் இருந்து சௌமியாவின் சத்தம் கேட்டு ஆதா்ஷ் அங்கு சென்று பாா்த்தாராம். அப்போது சௌமியா தன்னைத் தானே கழுத்து, கையை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததாராம். அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயற்சிப்பதற்குள் அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகவல் அறிந்த பாறசாலை போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.