திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!
பாசனக் கிணறு, சூரிய சக்தி பம்பு செட், உழவர் சந்தை: வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்
தமிழகத்தில் உள்ள பாசனக் கிணறுகளை சீரமைத்தல், சூரிய சக்தி பம்பு செட் அமைத்துத் தரப்படும், உழவர் சந்தைகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தமிழக வேளாண் பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து ஆற்றி வரும் உரையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில்,
இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்து ரூ.17.37 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சிறு,குறு விவசாயிகளின் பயனிற்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.10.50 கோடியில் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் (eNAM) 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒருங்கிணைக்க ரூ.39.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.50.79 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்.
300 கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க ரூ.1.84 கோடி ஒதுக்கீடு.
திறந்த வெளி பாசன கிணறுகளை புனரமைக்க ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ரூ.2.75 கோடியில் உருவாக்கப்படும்.
புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். இதற்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு.
மின்சார இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப்பாசனப் பகுதிகளிலும் உள்ள "சி" மற்றும் "டி" பிரிவு வாய்க்கால்களில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகளுக்கு ரூ.13.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.