செய்திகள் :

மதுரை மல்லிகை சிறப்புத் திட்டம்! மலர்கள் சாகுபடிக்கு ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு!

post image

மதுரை மல்லிக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகை செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பேரவையில் பேசிய அவர்,

"தினசரி வருமானம் ஈட்டுவதற்கு மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதில், மதுரை மல்லிக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகைச் செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். இதற்காக ரூ. 1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இதையும் படிக்க | வேளாண் பட்ஜெட்: உழவர் பாதுகாப்புத் திட்ட நிதியுதவி உயர்த்தி அறிவிப்பு!

பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க, ரூ. 2.40 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைப்பதற்கு மானியம் வழங்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பயிர் வகை விதைத் தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.

புரதச்சத்து நிரைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்" என்றார்.

இதையும் படிக்க | வேளாண் பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ. 3.58 லட்சம் கோடி பயிர்க் கடன்!

நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் "அக்ரி ஸ்டேக்'!

பிரதமரின் கௌரவ நிதி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, "அக்ரி ஸ்டேக்' வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் நில ஆவணங்கள் அனைத்தையும் இந்த வல... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடக்கம்!

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மாா்ச் 17) தொடங்குகிறது. வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை... மேலும் பார்க்க

பாசன நீா் பரப்புகளில் தூா்வாரும் பணி: விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு!

தமிழகத்தில் பாசன நீா் பரப்புகளில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொறியாளா்களுக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா். அந்தத் துறையின் செயல்பாடுகள் குறி... மேலும் பார்க்க

மொழிக் கொள்கை உறுதியைக் காட்டவே ‘ரூ’! -முதல்வா் விளக்கம்

மொழிக் கொள்கையில் நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவே நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ‘ரூ’ என பயன்படுத்தினோம் என்று முதல்வா் தெரிவித்தாா். மத்திய நிதியமைச்சா் இதனை பிரச்னையாக எழுப்பியதால், இந்திய அளவில் த... மேலும் பார்க்க

சுய உதவிக் குழு மகளிா் 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விவரங்களை சேகரிக்கும் பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க மாவட்ட... மேலும் பார்க்க

கட்டுப்பாட்டுக்குள் டெங்கு காய்ச்சல்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை சைதாப்பேட்டையி... மேலும் பார்க்க