செய்திகள் :

``நாடு திரும்பக் கூடாதுனு சொன்னாங்க, கொலை மிரட்டல் எல்லாம் வந்திருக்கு..'' - வருண் சக்ரவர்த்தி டாக்

post image

2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ஆடியிருந்தார். ஆனால், சிறப்பாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அதே துபாயில் நடைபெற்ற சாம்பியன் டிராபியில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றி இருக்கிறார். தற்போது இந்திய அணியில் மிக முக்கியமானச் சுழற்பந்து வீச்சாளர் என்ற இடத்தைப் பிடித்திருக்கும் வருண் சக்ரவர்த்தியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வருண் சக்ரவர்த்திக்கு கொலை மிரட்டல் வந்தது குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

வருண் சக்ரவர்த்தி

இது தொடர்பாகப் பேசியிருக்கும் அவர், "தற்போது எனக்கு நடக்கும் நல்ல விஷயங்களை எல்லாம் நம்பவே முடியவில்லை. 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் நான் சரியாக விளையாடவில்லை என்று பல விமர்சனங்களை எதிர்கொண்டேன். அந்த சமயத்தில் எனக்கு நிறையக் கொலை மிரட்டல்களும் வந்தது. இந்தியாவிற்கு திரும்பக்கூடாது என்று மிரட்டினார்கள். என்னுடைய வீட்டிற்கு வந்து என்னைத் தேடுவார்கள். சில சமயம் நான் என்னுடைய வீட்டில் மறைந்து கொள்வேன். நான் விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பியபோது பைக்கில் சிலர் என்னை பின் தொடர்ந்து வந்தார்கள். இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. இதனால் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தேன். ரசிகர்கள் மிகவும் எமோஷனலானவர்கள் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது.

டி20 உலக கோப்பை தொடரில் நான் சிறப்பாக செயல்படுவேன் என்றுதான் என்னை எடுத்தார்கள். ஆனால் நான் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதன் பிறகு மூன்று ஆண்டுகளாக நான் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை. நான் இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு கூட இவ்வளவு கஷ்டப்பட்டது கிடையாது. ஆனால் மீண்டும் கம்பேக் கொடுக்க கடுமையாக போராடி இருக்கிறேன். 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு என்னுடைய கிரிக்கெட்டில் நான் பல மாற்றங்களை செய்தேன். பயிற்சி செய்யும் முறையை மாற்றினேன். முன்பெல்லாம் நான் ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் 50 பந்துகளை வீசுவேன்.

வருண் சக்ரவர்த்தி

ஆனால் தற்போது 100 பந்துகளை வீசி வருகின்றேன். தேர்வு குழுவினர் என்னை சேர்ப்பார்களா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. ஒரு கட்டத்தில் எல்லாம் இனி முடிந்துவிட்டது என்று நினைத்தபோதுதான், ஐபிஎல் கோப்பையை வென்றோம். அதன்பிறகு மீண்டும் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சிதான். இந்த சாம்பியன் டிராபி கோப்பைத்தான் எனக்கு மிகச்சிறந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது" என்று வருண் சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`Mr. Fix-lt-னா அது இவருதான்' - கே.எல் ராகுலைப் புகழ்ந்த மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கே.எல் ராகுலைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்... மேலும் பார்க்க

IPL 2025: நெருங்கும் ஐபிஎல் தொடர்; பும்ரா பங்கேற்பதில் சந்தேகம்! - வெளியான தகவல் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் நான்குப் போட்டிகளில் பு... மேலும் பார்க்க

Axar Patel: `கிரிக்கெட் வீரராகவும் மனிதனாகவும் இங்குதான்.!’ - DC அணியின் புதிய கேப்டன் அக்சர் படேல்

இந்தியகிரிக்கெட்ஆல்ரவுண்டர்அக்சர்படேலை, வரும்ஐபில்தொடருக்கு தங்கள் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது டெல்லிகேபிட்டல்ஸ்.அதிக எதிர்பார்ப்புகள் நிலவும் இந்த சீசனில் புதியசகாப்தத்தைத்தொடங்கியுள்ளது டெல்லிகே... மேலும் பார்க்க

``ICC என்றால் இந்திய கிரிக்கெட் கவுன்சிலா?'' - ICC முடிவுகளை கண்டித்த ஜாம்பவான்கள்!

வெஸ்ட்இண்டிஸ்அணியின் முன்னால்லெஜண்டரிவேகப்பந்து வீச்சாளர் ஆண்டிராபர்ட்ஸ், இந்தியாவுக்கு சாதகமாகசாம்பியன்ஸ்டிராபிதொடரில் அனைத்து போட்டிகளையும் இந்திய வீரர்கள் ஒரே மைதானத்தில் விளையாடியதைக்கண்டித்துள்ளா... மேலும் பார்க்க

Dhoni: "எப்போதும் தோனியுடன் இருக்க விரும்புகிறேன்..." - நெகிழும் சஞ்சு சாம்சன்

ஐ.பி.எல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தனது அணியிலிருக்... மேலும் பார்க்க

KL Rahul: விராட் கோலியின் 9 வருட சாதனை முறியடிப்பு... முதலிடத்துக்கு முன்னேறிய கே.எல்.ராகுல்!

இந்திய அணி 2025-ஐ பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தோல்வியுடன் தொடங்கினாலும், உடனடியாக அதிலிருந்து மீண்டெழுந்து தற்போது ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றி அசத்தியிருக்கிறது. அதுவும் ஒரு சில வீரரின் செய... மேலும் பார்க்க