Axar Patel: `கிரிக்கெட் வீரராகவும் மனிதனாகவும் இங்குதான்.!’ - DC அணியின் புதிய கேப்டன் அக்சர் படேல்
இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் அக்சர் படேலை, வரும் ஐபில் தொடருக்கு தங்கள் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ்.
அதிக எதிர்பார்ப்புகள் நிலவும் இந்த சீசனில் புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது டெல்லி கேபிடல்ஸ்.
A new era begins today ❤️ pic.twitter.com/9Yc4bBMSvt
— Delhi Capitals (@DelhiCapitals) March 14, 2025
சமீபத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்திய அணி. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் அக்சர் படேல். இதுவே டெல்லி நிர்வாகம் அக்சர் படேலைத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
முந்தை சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான அணி, சரியாகச் செயல்படாததும் அணி நிர்வாகம் இந்த முடிவெடுத்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும் பண்ட் இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
31 வயதான அக்சர் படேல் 6 சீசன்கள் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடியுள்ளார். 82 போட்டிகளில் 967 ரன்கள் மற்றும் 7.09 எகானமியில் 62 விக்கெட் எடுத்துள்ளார்.
Axar Patel என்ன சொல்கிறார்?
கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து அக்சர் படேல், "டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வழிநடத்துவது எனக்கு முழுமையான கௌரவம். இதில் என் மீது நம்பிக்கை வைத்த உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நான் நன்றி கடன்பட்டுள்ளேன்." எனக் கூறியுள்ளார்.
Our fans are everything pic.twitter.com/EpOpeJuSyM
— Delhi Capitals (@DelhiCapitals) March 14, 2025
மேலும், "நான் ஒரு கிரிக்கெட் வீரராகவும் மனிதனாகவும் டெல்லி கேபிட்டல்ஸில்தான் வளர்ந்தேன். இப்போது அணியை வழிநடத்தத் தயாராகவும் உறுதியாகவும் இருக்கிறேன்.
எங்கள் பயிற்சியாளர்களும் உறுப்பினர்களும் மெகா ஏலத்தில் மிகச்சிறந்த பணியைச் செய்துள்ளனர், அபாரமான ஆற்றல் கொண்ட ஒரு சமநிலையான மற்றும் வலுவான அணியை உருவாக்கியிருக்கின்றனர்.
எங்கள் அணியில் தலைமை தாங்கியவர்கள் பலர் உள்ளனர், அது எனக்கு உதவியாக இருக்கும். ரசிகர்களின் மகத்தான அன்புடனும் ஆதரவுடனும் அணியில் இணைய ஆவலாக இருக்கிறேன்" என்றும் பேசியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல்லில் பங்குபெறும் 10 அணிகளில் 5 அணிகள் புதிய கேப்டன்களை அறிவித்துள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி அணியாக கேப்டனை அறிவிக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
