திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!
பட்ஜெட்: 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு!
தமிழகத்தில் விளையும் 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடுபெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர்,
"நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடுபெற நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிதாக இந்த 5 விளைபொருளுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான 'டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி' உருவாக்கப்படும்" என்றார்.