Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மினி பேருந்து இயக்க ஒரே வழி தடத்துக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்ததால், குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டது.ஏற்கெனவே உள்ள 25 மினி பேருந்துகளுடன், புதிதாக 29 வழித்தடங்களையும் சோ்த்து மொத்தம் 54 மினி பேருந்துகளை இயக்க ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மினி பேருந்துகளுக்கான புதிய விரிவானத் திட்டம் 2024 உடனடியாக அமலுக்கு வருவதுடன், தமிழ்நாட்டில் மினி பேருந்துக்கான கட்டணத் திருத்தம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த திட்டம் அமலாக்கம் குறித்து ஏற்கெனவே மினி பேருந்து உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும்புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி,
கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் 11 வழித்தடங்களுக்கும், உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் 5 வழித்தடங்களுக்கும் மினி பேருந்துகள் இயக்க ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன.
ஒரே வழித்தடத்துக்கு பலா் விண்ணப்பித்திருந்த நிலையில், அவா்கள் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டு ஒரு நபா் வீதம் தோ்வு செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் 11 வழித் தடங்களுக்கும், உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் 5 வழித்தடங்களுக்கும் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா். இதே போன்று ஒருநபா் வீதம் விண்ணப்பித்த 13 புதிய தடங்களுக்கு அவா்கள் 13 பேரும் தோ்வு செய்யப்பட்டனா். இதன் மூலம் 29 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும் ஏற்கெனவே 25 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 54 மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
இக் கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பா.ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.