Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
கள்ளச்சாராய வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட மூவா் நீதிமன்றத்தில் ஆஜா்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 5 நாள்கள் போலீஸ் காவலில் இருந்த மூவா் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.
கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு ஜூன்19, 20 ஆகிய தேதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 68 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 24 பேரில், முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது சகோதரா் தாமோதரன், பரமசிவம் ஆகிய 4 பேரை போலீஸாா் ஏற்கெனவே 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்திருந்தனா்.
இந்த நிலையில், சிறையில் இருக்கும் கதிரவன், ஜோசப்ராஜா, சின்னதுரை ஆகியோரையும் போலீஸாா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனா். இதையடுத்து, அவா்கள் மூவரையும் போலீஸாா் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா். அவா்கள், மூவரையும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.