செய்திகள் :

கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியிருப்பது நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும்: அமைச்சர் எஸ்.ரகுபதி

post image

புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, விசாரணையை மேலும் காலதாமதப்படுத்தும், துரிதமான பலன் கிடைக்காது என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 68 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் புதன்கிழமை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில்,வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும், தமிழக காவல்துறையும் சிபிசிஐடியும் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில்,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, விசாரணையை மேலும் காலதாமதப்படுத்தும், துரிதமான பலன் கிடைக்காது என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் சம்பவத்தில்,முதல்வர் உத்தரவின்பேரில் 3 அமைச்சர்கள் அங்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளைத் தீவிரப்படுத்தினோம். சிபிசிஐடி போலீஸார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க |தேர்தல் பிரசாரங்களை தொடங்குங்கள்: முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்க முடியாது.

அதேநேரத்தில், வேறு எந்த அரசும் எடுத்திருக்காத நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுத்தது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும்.

உலகம் முழுவதும் பாராட்டும் காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை இருக்கிறது. உரிய நடவடிக்கை, படிப்படியாக உரிய காலத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு எங்களை ஆலோசிக்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து முதல்வர் சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது பற்றி உரிய முடிவை எடுப்பார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை மீண்டும் முதலில் இருந்து தொடங்கப்படும் என்பதால், காலதாமதம் ஏற்படும். துரிதமான பலன் கிடைக்காது. இந்த உத்தரவால் தமிழ்நாடு அரசுக்கோ, திமுகவுக்கோ எந்தப் பின்னடைவும் இல்லை. அந்தப் பகுதி மக்கள், அரசின் நடவடிக்கையால் திருப்தி அடைந்திருக்கிறார்கள் என்றார் ரகுபதி.

மெட்டி ஒலி இயக்குநரின் புதிய தொடர் படப்பிடிப்பு தொடக்கம்!

மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன் இயக்கும் புதிய தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.2002ஆம் ஆண்டு முதல் 2005 வரை ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' தொடரில் கோபி பாத்திரத்தில் நடித்து மக்... மேலும் பார்க்க

சாக்கு மூட்டையில் தலித் பெண்ணின் உடல்: பாஜகவுக்கு ஆதரவளித்ததால் கொலையா?

உத்தரப் பிரதேச மாநிலம் கர்ஹல் தொகுதியில் 23 வயது பிற்படுத்தப்பட்ட பெண்ணின் சடலம், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்ஹல் தொகுதியில் இன்று(நவ. 20) இடைத்தேர்தல் நடைபெற்று வ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: முதல்வர் கடிதம்!

பாகிஸ்தான் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களை உள்ளடக்கிய 14 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைக... மேலும் பார்க்க

மின் மாற்றி கொள்முதலில் ஊழல் நடைபெற்றதா..?: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: மின்துறை சார்பில் கொள்முதல் செய்யப்படுகின்ற அனைத்து உபகரணங்களும், கடந்த காலங்களில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது. இதில் எந்தவித தலையீடுகளோ, தவறு... மேலும் பார்க்க

‘பிரிவு’ என்ற முடிவை மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்: பார்த்திபன்

‘பிரிவு’ என்ற முடிவை மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.ஏ.ஆர். ரஹ்மான்-சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறவிருப்பதாக நேற்று தனித்தனியாக அறிவிப்பு வெளியான நிலையில்... மேலும் பார்க்க

டி20 தரவரிசை: முதலிடத்தில் ஹார்திக் பாண்டியா! 3-வது இடத்தில் திலக் வர்மா!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 4 போட்டி... மேலும் பார்க்க