விமானம் வேதகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது: உ.பி. கவர்னர் பேச்சு!
கழிவறையை எத்தனை நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்? | உலக கழிவறை தினம்!
உலக கழிவறை தினமான நவம்பர் 19 அன்று, ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருள் கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ‘கழிப்பறைகள் – அமைதிக்கான இடம்’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. முதலில் ஜாக் சிம் என்பவரால், 2001-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உலக கழிப்பறை கழகம் (சிங்கப்பூர் சார்ந்த அரசுசாரா அமைப்பு ) தொடங்கப்பட்டது. அதன்பின், 2013-ம் வருடம் முதல் இதே தேதியை ஐ. நா. உலக கழிவறை தினமாக அறிவித்தது. கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இன்றளவும்கூட கிராமப்புற மக்கள் கழிவறை இல்லாமல் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். அப்படித் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் நம் உடலுக்குப் பல தீங்குகள் வந்து சேரும். திறந்த வெளியில் மலம் கழிப்பதனால் வரும் பாதிப்புகள், கழிவறையின் முக்கியத்துவம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை இந்த கழிவறை தினம் மக்களிடம் ஏற்படுத்துகிறது.
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானவை உணவு, உடை மற்றும் உறைவிடம். இதற்கு அடுத்தபடியாக வருவது சுகாதாரம். அப்படி நம் கழிவறையின் சுகாதாரத்தைப் பேணுவது நம் கையில்தான் உள்ளது. நாம் பயன்படுத்தும் கழிவறையை எவ்வளவு தூய்மையாக வைத்திருக்க வேண்டும் மற்றும் நம்மை எவ்வளவு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நாம் கழிவறையை உபயோகப்படுத்தி முடித்தபின் அதை எவ்வளவு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பன குறித்து சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
கழிவறையை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்?
கழிவறைகளை அதற்குரிய கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக வீட்டில் இருக்கும் கழிவறையைக் குறைந்தது 4 பேர் மட்டுமே பயன்படுத்துவோம். அதை நான்கு நாள்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ கழுவி வைத்திருந்தால் போதுமானது. இதே பொதுக்கழிப்பிடங்கள், வேலை செய்யும் இடங்களில் இருக்கும் கழிப்பிடங்கள் போன்றவற்றைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
கழிவறையைப் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் நம்மை எவ்வளவு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்?
முதலில் நாம் கழிவறைகளைப் பயன்படுத்தி முடித்தபின் கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இதனால், மலம் மூலம் பரவும் நோய்களை நம்மால் தடுக்க முடியும். வெஸ்டர்ன் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் அதனைச் சுத்தம் செய்தாக வேண்டும். ஏனெனில், வெஸ்டர்ன் கழிவறைகளைப் பயன்படுவதால் தொற்றுகள் பரவும் வாய்ப்பு நிறைய உள்ளது. இது முக்கியமாக பெண்களை எளிதில் பாதிக்கும். பொது கழிவறையாக இருந்தால் அதன் மேல் ஒரு டாய்லெட் ஷீட் அல்லது ஸ்பிரே பயன்படுத்துவது தொற்றுகள் பரவாமல் இருப்பதற்கான வழியாக இருக்கும். பொதுவாக பொது கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டி வந்தால், வெஸ்டர்னை தவிர்த்து இந்தியன் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதே நல்லது.
டாய்லெட் ஸ்பிரே மற்றும் டாய்லெட் ஷீட்களை பயன்படுத்துவதால், நமக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா?
தொற்றுகள் வராமல் தடுக்க இவை கிருமி நாசினியாக பயன்படும் என்பதால், இது நம்மைப் பெரிதாக பாதிக்காது.
தொற்று பரவினால் வரும் பாதிப்புகள்...
கழிவறையையும் நம்மையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவில்லை என்றால், சிறுநீர்த்தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. சிறுநீர்ப்பாதையும் இனப்பெருக்கப்பாதையும் அருகில் இருப்பதால் சிறுநீர்ப்பாதைத் தொற்றும் இனப்பெருக்கப்பாதை தொற்றும் ஆண்களைவிடப் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தொற்றின் அறிகுறிகள்...
சிறுநீர் போகும்போது எரிச்சல், அடி வயிற்று வலி, குளிர்க்காய்ச்சல், வெள்ளைப்படுதல் போன்றவை சிறுநீர்ப் பாதை தொற்றின் அறிகுறிகள். அதிகமாக வெள்ளைப்படுவது இனப்பெருக்க பாதை தொற்றின் அறிகுறி. இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம்.
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, நம் வீட்டை மட்டுமல்லாமல், கழிப்பறையையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
எப்படி கேட்பது?
1. நீரதிகாரத்தின் முதல் 5 ஆடியோ எபிசோடுகள் இன்று வெளியாகியுள்ளன. இனி வாரந்தோறும் வியாழன் அன்று 5 புதிய எபிசோடுகள் வெளியாகும்.
2. விகடனின் Android மற்றும் iOS செயலிகளை இன்ஸ்டால் செய்து இந்த ஆடியோக்களைக் கேட்கலாம். App-ன் VIP பக்கம் மற்றும் Vikatan Play menu icon ஆகிய இரண்டிலும் புதிய நீரதிகாரம் தொடர் அப்டேட் ஆகியிருக்கும். ஒருவேளை பழைய App வெர்ஷனாக இருந்தால் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்யவும். (Android: 5.6.6.1 | iOS: 7.7)
3. நீரதிகாரம் ஆடியோ புத்தகத்தின் நேரடி லிங்க்: https://www.vikatan.com/audio-book/194523 (விகடன் App-ல் மட்டுமே இது Open ஆகும். எனவே App-ஐ இன்ஸ்டால் செய்துவிட்டு Click செய்யவும்.
மொபைலில் இந்த வசதியை பெற க்ளிக் செய்க.. https://vikatanmobile.page.link/web-play
4. நீரதிகாரம் ஆடியோ புத்தகம் மட்டுமல்ல; இனி வாரந்தோறும் வெளியாகவிருக்கும் எக்ஸ்க்ளூசிவ் `விகடன் ப்ளே' ஆடியோக்களையும் நீங்கள் இலவசமாகவே கேட்கலாம். இன்னும் பல புதிய ஆடியோக்கள் உங்களுக்காக அணிவகுத்து நிற்கின்றன. எனவே வியாழன்தோறும் ஆச்சர்யங்களுக்குத் தயாராக இருங்கள்.
5. விகடன் ப்ளே தொடர்பான கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு வாசகர்கள் webmaster@vikatan.com என்ற மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளலாம்.