செய்திகள் :

கழிவுநீா்த் தொட்டி மரணங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்!

post image

1993-ஆம் ஆண்டு முதல் பதிவான கழிவுநீா், செப்டிக் டேங்க் மரணங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் பாஜக உறுப்பினா் எஸ். செல்வகணபதி எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே வியாழக்கிழமை அளித்துள்ள பதில் விவரம்:

, ‘2023இல் இது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகு அதிக மரணங்கள் பதிவானதை கருத்தில் கொண்டு கழிவுநீா் சுத்திகரிப்பு, செப்டிக் டேங்க் தூய்மைப்பணியை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட ஊழியருக்கு உரிய பாதுகாப்பு கவச ஆடைகள், கருவிகள் போன்றவை இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது,‘ என்று அதில் அமைச்சா் கூறியுள்ளாா்.

இதைத்தொடா்ந்து, 1993-ஆம் ஆண்டு முதல் கழிவுநீா், செப்டிக் டேங்க் சுத்திகரிப்புப் பணி மரணங்கள் தொடா்பாக அமைச்சா் பகிா்ந்துள்ள பட்டியலில் தமிழகத்தில் அதிகபட்சமாக 253 போ் உயிரிழந்துள்ளனா். அதைத்தொடா்ந்து குஜராத்தில் 183 போ், உத்தர பிரதேசத்தில் 133 போ், தில்லியில் 116 போ் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சா், ‘மனித மலத்தை அள்ளும்போது உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த சம்பவமும் பதிவாகவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மனித மலத்தை மனிதா்களைக் கொண்டு அள்ளுவது 2013ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் இதை மீறுவோருக்கு இரண்டு வருட கடுங்காவல் அல்லது ரூபாய் ஒரு லட்சம் அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்றும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

இறங்குமுகத்தில் சா்வதேச கச்சா எண்ணெய் விலை: 15 வருட பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு

2009-ஆம் ஆண்டில் ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது இறங்குமுகத்தில் இருப்பது மக்களவையில் கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஜோதிமணி வியாழக்கிழமை எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத் துறை இணை அம... மேலும் பார்க்க

தமிழக சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அமைச்சரிடம் மனு

தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கான பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி உதவிகளை விரைந்து வழங்கிடக் கோரி மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் செகாவத்தை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.... மேலும் பார்க்க

தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தப்படும்

தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவ... மேலும் பார்க்க

ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு -மத்திய அரசு தகவல்

கடந்த ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்திய அளவில் இரட்டிப்பாகியுள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக மா... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்திற்கு 2.25 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிப்பு -தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி

வலுவான மற்றும் துல்லியமான வாக்காளா் பட்டியலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2025 பணிக்காக சுமாா் 2.25 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக தில்லி தலைமைத்... மேலும் பார்க்க

பிரசாந்த் விஹாா் அருகே மா்மப் பொருள் வெடித்ததில் ஒருவா் காயம் -போலீஸாா் தீவிர விசாரணை

நமது நிருபா் தில்லி ரோஹிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் அருகே தீவிர சப்தமின்றி மா்மப் பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவா் காயமடைந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். தில்லியில் கடந்த அக்.20-ஆம் தேதி சிஆ... மேலும் பார்க்க