செய்திகள் :

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

post image

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்றும், ஜஜ்ஜார் மாவட்டத்தில் மொபைல் கடை நடத்தி வந்தவர் என்றும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஹிமானி நர்வால் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சச்சினை திங்கள்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போதுதான், அவர் மொபைல் சார்ஜர் மூலம் ஹிமானியைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

சச்சினும், ஹிமானியும் சமூக ஊடகம் மூலம் நட்பாகி பழகி வந்ததும், அவ்வப்போது ஹிமானி வீட்டுக்கு அவர் வந்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஜய் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஹிமானி தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பிப். 27 அன்று அவரது வீட்டுக்கு சச்சின் வந்துள்ளார். இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. மொபைல் சார்ஜரைக் கொண்டு சச்சின், ஹிமானி கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

பிறகு, அவரது நகை, செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை அங்கிருந்த சூட்கேசில், ஹிமானி உடலுடன் வைத்து தனது கடைக்குக் கொண்டு வந்துள்ளார். அங்கே நகை, செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை வைத்துவிட்டு, சூட்கேசுடன் சம்ப்லா பேருந்து நிலையம் வந்து அதனை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டிருப்பதையும், இருவருக்குள்ளும் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதையும் காவல்துறையினர் உறுதி செய்திருக்கிறார்கள். கைதான சச்சின் கையில் கடித்த அடையாளமும் காயங்களும் இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

துணை முதல்வருடன் மோதல்போக்கு இல்லை: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: துணை முதல்வா் ஏக்நாஷ் ஷிண்டேயுடன் மோதல்போக்கு ஏதுமில்லை என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். சிவசேனை (உத்தவ் பிரிவு) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் இதுபோன்ற திரைக்கதைகளை எழுதி... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புது தில்லி: வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவா் மற்றும் நிபுணா்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவில் அக்கட்சி... மேலும் பார்க்க

பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கோரி ராப்ரி தேவி திடீா் போராட்டம்

பாட்னா: பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, சமூகப் பாதுகாப்பு, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டா், இலவச மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி பாட்னாவில் உள்... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: மீட்புப் பணியில் தானியங்கிகளை பயன்படுத்த ஆலோசனை

நாகா்கா்னூல்: தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணி 10 நாள்களைக் கடந்தும் சவாலாக இருந்து வரும் சூழலில், மீட்புப் பணியில் தானியங்கிகளைப் (ரோபா) பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆல... மேலும் பார்க்க

ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா்களுக்கு நமஸ்காரம்!

இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆஸ்கா் விருது வழங்கும் விழாவில் வரவேற்புரையாற்றிய நிகழ்ச்சித் தொகுப்பாளா் கோனன் ஓபிரையன், இந்திய ரசிகா்களை ‘நமஸ்காரம்’ என்று கூறி வரவேற்றாா்.மேலும், அவா் ... மேலும் பார்க்க

ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு மே மாதம் தொடக்கம்: பிரதமா் மோடி அறிவிப்பு

சாசன் (குஜராத்): 16-ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். உலக வனவிலங்குகள் தினத்தையொட்டி (மாா்ச் 3) குஜராத்தின் ஜுனாகத... மேலும் பார்க்க