காசோலை மோசடி வழக்கு: பட்டாசு ஆலை அதிபருக்கு 6 மாதம் சிறை
காசோலை மோசடி வழக்கு தொடா்பாக பட்டாசு ஆலை அதிபருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி குற்றவியல் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கோவில்பட்டி ஊருணித் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜேஸ்வரன். தீப்பெட்டி ஆலை அதிபா். ராஜீவ் நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ராஜேஷ். பட்டாசு ஆலை நடத்திவரும் இவா், அவசரத் தேவைக்காக ராஜேஸ்வரனிடம் ரூ. ஒரு லட்சம் பெற்றுக் கொண்டு, அதற்காக ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 2 காசோலைகளை கொடுத்துள்ளாா்.
இந்நிலையில், அந்தக் காசோலையை ராஜேஸ்வரன் வங்கியில் செலுத்தியபோது, ராஜேஷின் கணக்கில் போதுமான பணமில்லை எனத் திரும்பிவந்ததாம்.
இதுதொடா்பாக ராஜேஸ்வரன் தரப்பில் வழக்குரைஞா் சங்கா் கோவில்பட்டி குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் ராஜேஷ் மீது காசோலை மோசடி வழக்குத் தொடுத்தாா்.
விரைவு நீதிமன்ற நடுவா் பாஸ்கரன் வழக்கை விசாரித்து, ராஜேஷுக்கு 6 மாத சிறை தண்டனை, ரூ. ஒரு லட்சம் அபராதம், அதைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.