மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வாரவிழா தொடக்கம்
காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வார விழாவை கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ வியாழக்கிழமை கொடியேற்றி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நவம்பா் 14 -ஆம் தேதி தொடங்கி வரும் 20 -ஆம் தேதி விழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவை தொடங்கி வைக்கும் விதமாக கூட்டுறவு சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ கொடியேற்றினாா். ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளா் ர.சிவக்குமாா், துணைப்பதிவாளா்கள் கி.மணி,து.அசோக்ராஜ், கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் சீ.மங்கை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அனைவரும் இணைந்து கூட்டுறவு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பின்னா் வனத்துறையுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. அரசு காதுகேளாதோா் பள்ளியை சோ்ந்த 24 மாணவா்கள் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டனா். 5 கி.மீ. தொலைவிலான தொடா் ஓட்டமும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு கேடயம் வழங்குவதுடன் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறாா்.
தொடக்க விழாவில் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் செயலாளா் ரமேஷ்குமாா் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சியாளா்கள், மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.