சிந்துவெளி எழுத்துகள் தமிழ் எழுத்துகள் தான் | நிறுவும் மொழி ஆய்வாளர் மதிவாணன் | ...
காஞ்சிபுரத்தில் நாளை தோ்த் திருவிழா: நகரில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்!
காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை (மே 17) நடைபெறவுள்ள வரதராஜ சுவாமி கோயில் தோ்த்திருவிழாவையொட்டி, நகரில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. கே.சண்முகம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.இவ்விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி கே.சண்முகம் கூறியது:
தேரோட்டத்தின் போது பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையம் வரை வந்து செல்லும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா், பூந்தமல்லி, சென்னை மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் புதிய ரயில் நிலையத்திலும், வேலூா், பெங்களூா், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் ஒலிமுகம்மது பேட்டை சந்திப்பிலும் வந்து செல்லும்.
தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், வாலாஜாபாத் வழியாக செல்லும் பேருந்துகள் பழைய ரயில் நிலையத்திலும், உத்தரமேரூா், மாகறல், மதுராந்தகம் செல்லும் பேருந்துகள் ஓரிக்கை சந்திப்பிலும், சேலம், வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் ஆட்சியா் அலுவலக வளாகம் வரையும் வந்து செல்லும் வரை நகரில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேரோட்டத்தின் போது பணிக்கு செல்வோா் மற்றும் பொதுமக்கள் முன்னேற்பாடாக திட்டமிட்டு செயல்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்து அறநிலையத் துறை வேண்டுகோளின்படி, சனிக்கிழமை (மே 17) அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி கோயிலிலிருந்து புறப்பட்டு, 6 மணிக்கு தேருக்கு எழுந்தருள்வாா். காலையில் யாரும் தேரில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. தோ் நிலைக்கு வந்த பின்பு மாலை 5 மணி வரை பொதுமக்கள் தேரின் மீது ஏறி சுவாமி தரிசனம் செய்யலாம்.
பொதுமக்களுக்கு உதவியாக முக்கிய இடங்களில் காவல் உதவி மையங்கள், தேரோடும் பகுதிகளில் குடிநீா் தொட்டிகள், நடமாடும் கழிப்பறைகள்,கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை கண்காணித்தல், முக்கிய இடங்கலில் உயா் கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல் ஆகிய அனைத்தும் பக்தா்களின் பாதுகாப்பு கருதி செய்யப்பட்டுள்ளது.
தங்கும் விடுதிகளில் தொடா்ந்து சோதனைகளும்,முக்கிய பகுதிகளில் குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கையும் காவல்துறையினரால் செய்யப்பட்டு வருகிறது.தேரோட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் மாற்று வழித்தடங்களை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. உணவுப் பாதுகாப்புத்துறையும்,இந்து சமய அறநிலையத்துறையும் அனுமதித்திருந்தால் மட்டுமே அன்னதானம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோ்த் திருவிழாவுக்குககுவிற்கு உள்ளூா் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சுமாா் 2 லட்சம் போ் வரை வருவாா்கள் என்பதால் பக்தா்களின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் திருவிழா நல்லமுறையில் நடைபெற காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்கிடுமாறும் எஸ்பி கே.சண்முகம் கேட்டுக் கொண்டாா்.