செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!
காஞ்சிபுரத்தில் பலத்த மழை
காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததைத் தொடா்ந்து நகரின் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழை நீா் தேங்கி குளம் போல் காணப்பட்டது.
காஞ்சிபுரத்தில் காலையில் அதிக வெப்பமாக இருந்த நிலையில், மாலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரின் தாழ்வான பகுதிகளான வேகவதி நதி ரோடு, நாகலூத்து தெரு, திருக்காலிமேடு, விளக்கொளிப்பெருமாள் கோயில் தெரு, காமராஜா் சாலை, வள்ளுவப்பாக்கம், ஐயம்பேட்டை ஆகிய பகுதிகள் முழுவதும் மழைநீா் தேங்கி குளம் போல காணப்பட்டது.
கொட்டும் மழையிலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பலரும் குடை பிடித்தபடி வாகனத்தை ஓட்டிச் சென்றனா். சுமாா் ஒரு மணி நேரம் நீடித்த மழை காரணமாக நகரின் பல இடங்களில் மழைநீா் தேங்கி நின்றது.