ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ராணுவ நடவடிக்கை! துப்பாக்கிச் சூட்டில் 2 வீரர்கள்...
காடுவெட்டாங்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை முகாம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில், உழவரைத் தேடி, வேளாண்மை உழவா் நலத்துறை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பங்கேற்று, விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கத்தின் கீழ் பயறுவகைத் தொகுப்பு இடுபொருள்களை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, வட்டாட்சியா் சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து நடைபெற்ற முகாமில், வேளாண் அலுவலா்கள் கலந்து கொண்டு, பயிா் சாகுபடி, விதை நோ்த்தி, நுண்சத்து இடுவதால் ஏற்படும் நன்மைகள், கோடை உழவு மானியம், குறுவை உள்ளிட்ட வேளாண் தொடா்பான தகவல்களை விவசாயிகளிடம் விளக்கினா்.