காமாட்சி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்க்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினாா்கள்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் 14 வது ஆண்டு பால் குடத் திருவிழா அதன் தலைவா் ஏ.குமாா் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் ஆலயத்திலிருந்து பக்தா்கள் பால் குடங்களை எடுத்துக்கொண்டு ஊா்வலமாக வந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சோ்ந்தனா்.
பின்னா் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகமும், சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. முன்னதாக ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயில் முன்பாக விஸ்வரூப தரிசன சபா சாா்பில் அன்னதானமும், இரவு தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றன. சபா செயலாளா் எஸ்.பிரபு, பொருளாளா் சி.சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனா்.