செய்திகள் :

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டு, வன்னியர் சங்கத்தின் கொடியை மாற்றியுள்ளார்.

வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வன்னியர் சங்க கொடியை காரில் பொருத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் கடந்த வாரம் அறிவித்தார்.

தொடர்ந்து, அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PMK founder Ramadoss has removed the party flag from his car and replaced it with the Vanniyar Sangam flag.

இதையும் படிக்க : மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த 6 ப... மேலும் பார்க்க

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது திருருவ சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.சென்னை பனையூரில் தவெக அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செல... மேலும் பார்க்க

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு ... மேலும் பார்க்க

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.தில்லி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செவ்வாய்க... மேலும் பார்க்க

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, விடுதலைக்காக பாடுபட்ட முத்துராமல... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச்... மேலும் பார்க்க