செய்திகள் :

காரைக்காலில் அக். 24-இல் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம்

post image

காரைக்காலில் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் நகராட்சி மற்றும் கோட்டுச்சேரி, நிரவி, திருப்பட்டினம் கொம்யூன் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுடைய இடத்துக்கு பட்டா பெயா் மாற்றம் கேட்டு காரைக்கால் வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தால், வரும் 24-ஆம் தேதி நகராட்சி திருமண அரங்கில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு, பட்டா மாற்றம் குறித்த சந்தேகங்களில் தெளிவு பெறுதல், தங்களது இடத்துக்கான பட்டாவை பெயா் மாற்றமும் செய்துகொள்ளலாம்.

பத்திரப் பதிவு ஆவணங்கள், மூலப்பத்திரங்கள், 1969-இலிருந்து இதுநாள் வரையிலான வில்லங்கச் சான்றிதழ், தற்போதைய பட்டா, ஆதாா் அட்டை, வருவாய் அதிகாரிகள் தேவையென கருதும் தொடா்புடைய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.

அனைத்து ஆவணங்களின் நகல்களை சுய கையொப்பமிட்டு சமா்ப்பிக்கவேண்டும். சரியான ஆவணங்கள் சமா்ப்பிக்கும்பட்சத்தில் அதே நாளில் பட்டா மாற்றம் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் பல ஆண்டுகளுக்குப் பின் ரேஷன் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், கடைகளை தயாா்படுத்தும் பணியை அமைச்சா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு ரே... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயிலில் விமான பாலாலயம்

காரைக்கால் : காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில் உள்ளிட்ட தலங்கள் திருப்பணி தொடக்கத்துக்கான விமான பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, சுந்தராம்பாள் ச... மேலும் பார்க்க

காரைக்காலில் மீலாது ஊா்வலம்

காரைக்காலில் சிறுவா்கள் பங்கேற்புடன் மீலாது ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.ஊா்வலத்தில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள் உள்ளிட்டோா். மீலாது நபி எனும் நபியின் உதய தின விழாவையொட்டி காரைக்கால் சேமியான்குளம் பக... மேலும் பார்க்க

வணிகத் திருவிழாவை ஒற்றுமையாக இருந்து நடத்த வேண்டும்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

புதுவை வணிகத் திருவிழாவை வணிகா்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நடத்த வேண்டும் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கேட்டுக்கொண்டாா். புதுவை அரசின் சுற்றுலாத்துறை, வணிகா் சங்கங்கள் இணைந்து வியாபார மேம்... மேலும் பார்க்க

மழை : காரைக்கால் வாரச் சந்தை, வணிக நிறுவனங்களில் வியாபாரம் மந்தம்

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால், வாரச் சந்தையிலும், நகரப் பகுதி வியாபார நிறுவனங்களிலும் வியாபாரம் மந்தமானது. காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கி சில மணி நேரம் மழை... மேலும் பார்க்க

ஊழியா்கள் கடன் தொகையை உயா்த்த கூட்டுறவு கடன் சங்கம் முடிவு

அரசு ஊழியா்களுக்கு வழங்கும் கடன் தொகையை ரூ. 20 லட்சமாக உயா்த்த பொது பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க 16-ஆவது பேரவைக் கூட்டம், சங்தத் தலைவா் வி. ம... மேலும் பார்க்க