செய்திகள் :

காலநிலை மாற்றம்; நகர வளர்ச்சி... எலிகளுக்கு கொண்டாட்டம்!

post image

ழை, வெள்ளம், பனி உருகுதல் எல்லாம் காலநிலை மாற்றத்தோட விளைவுகள்னு தெரியும். இப்போ அதுல எலிகளின் பெருக்கமும் சேர்ந்துடுச்சு. உலகம் சூடாகுறதால நகரங்களில் எலிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிட்டு வருதாம். நகர வளர்ச்சி, மக்கள் கூட்டம், உணவகங்கள் அதிகரிக்கிறதால, எலிகளுக்கும் வாழ ஏதுவா இருக்குன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.

எலி (சித்திரிப்பு படம்)

வாஷிங்டன்ல எலிகள் பிரச்னை அதிகம். சான்ஃப்ரான்சிஸ்கோ, டொரான்ட்டோ, சிகாகோ, பாஸ்டன் மாதிரி சில நகரங்கள்லேயும் எலிகள் அதிகமாகிட்டே வருதாம். நியூ ஆர்லீன்ஸ், டோக்கியோ மாதிரி நகரங்கள்ல எலிகளை கன்ட்ரோல்ல வைக்கிறதுல கவனமா இருக்காங்களாம்.

எலிகள் நகரங்கள்ல அதிகமானா, உணவுப் பொருள்கள் சேதமாகும். மின்கம்பிகளை கடிச்சு சேதப்படுத்தும். வீட்டுச் சுவர்கள்லகூட துளை போட்டுடும். எலிகளால நோய்கள் பரவும். முக்கியமா எலிகள் இருந்தா, பூனைகளும் பாம்புகளும் அதிகமாகும்.

குப்பை கழிவுகள்

எலிகள் வளர்றதுக்கு காரணம் வெப்பம் மட்டும் இல்ல, நகர வளர்ச்சி, உணவகங்கள், குப்பை இதெல்லாம் மேலோட்டமான காரணங்கள். சுற்றுப்புறம் சுத்தமில்லாம இருந்தா, உணவுப்பொருள் குப்பைகளை முறையா அப்புறப்படுத்தப்படாம இருந்தா, எலிகள் பெருக்கம் அதிகரிக்கத்தான் செய்யும். குப்பைகள் ஒழுங்கா அகற்றப்படாத நகரங்கள்ல எலிகள் பர்மனென்ட்டா தங்கிடும்.

இருட்டு இடங்களும் உணவுக்குப்பைகள் கொட்டப்படுற இடங்களும்தான் எலிகள் ஒளிஞ்சு வாழுற இடங்கள். இந்த மாதிரியான இடங்களை சுத்தமாக்கினா, எலிகள் தானா குறையும். குறிப்பா, வெயில்ல எலிகள் தண்ணீர் தேடி வரும். நாம, குடிநீர்த்தொட்டிகளை மூடி வெச்சா, தண்ணீர் கிடைக்காம அழிஞ்சு போயிடும். அப்புறமென்ன, நம்ம நகரம் நம்ம கையில் தான்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`Sugar-Free', `No Added Sugar' -இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எது சிறந்தது?

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்துக்கு மாறுவதற்கான முதல் அடி சர்க்கரை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவதுதான். அதிகப்படியாக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமனை ஏற்படுத்துவதுடன், நாளடைவில் நீரிழிவு நோய் மற்றும் பிற பி... மேலும் பார்க்க

36,000 மலர்ச் செடிகள்; காய், கனிகள்... புதுச்சேரி அரசின் மலர் கண்காட்சி.. குவியும் பார்வையாளர்கள்!

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் விழா புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் வேளாண் விழா 2025 மற்றும் 35-வது காய்கறி, கனி, மலர் கண்காட்சி துவக்க விழா ... மேலும் பார்க்க

``பாலியல் வீடியோக்களால்தான் இப்படி நடக்குது..'' -திருமாவளவன் சொல்வதென்ன?

கிருஷ்ணகிரியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இதனைத் தொடர்ந்து திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில... மேலும் பார்க்க

அடி மேல் அடி வாங்கும் RN Ravi... சீமானுக்கு செக்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,அடுக்கடுக்கான கேள்விகளால் திணறிய ஆளுநர் ஆர்.என ரவி தரப்பு. 8 குட்டுகளை வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இன்னொருபக்கம் சீமானுக்கு செக் வைத்துள்ளது உயர்நீதிமன்றம். விஜயை, நெல்லையில... மேலும் பார்க்க

ஆளுநருக்கு உச்ச நீதிமன்றத்தின் அடுக்கடுக்கான கேள்விகள்! | RN Ravi | Parliament | DMK Imperfect Show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* குடும்ப நலனே காங்கிரஸுக்கு முக்கியம் - மோடி * மாநிலங்களவையில் காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி! * கைவிலங்கு போடுவதை நியாயப்ப... மேலும் பார்க்க

Illegal Immigrants: 2009 முதல் எத்தனை இந்தியர்களை US வெளியேற்றியிருக்கிறது? அமைச்சர் வெளியிட்ட தரவு

டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களை தங்கள் நாட்டின் ராணுவ விமானங்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பியனுப்பிவருகிறார். அந்த வகையில், அம... மேலும் பார்க்க