செய்திகள் :

காலமானார் 'அன்னக்கிளி' வயலினிஸ்ட் ராமசுப்பு!

post image

இசைஞானி இளையராஜாவுடன் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் வயலினிஸ்டாக இருந்த ராமசுப்பு என்ற ராமசுப்ரமணியன் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

ஒன்பதாவது வயதில் தன்னுடைய அப்பா கே.எஸ், நாராயண ஐயரிடம் வயலின் கற்றுக் கொள்ளத் தொடங்கிய ராமசுப்பு 12வது வயதில் புகழ்பெற்ற பரூர் சுந்தரம் ஐயரிடம் சீடராகச் சேர்ந்தார்.

நீலம் சஞ்சீவ் ரெட்டியிடம் விருது வாங்கிய ராமசுப்பு

மேலும் செம்பை வைத்தியநாத பாகவதர் மற்றும் திருவாலங்காடு சுந்தரேச ஐயர் இருவரிடமும் கர்நாடக சங்கீதமும் பயின்றவர்.

சென்னை அடையார் இசைக் கல்லூரியில் வயிலினில் சங்கீத வித்வான் கோர்ஸ் முடித்து விட்டு அறுபதுகளில் ஹெச்.எம்.வி.,யில் இணைந்தார். 

தன்னுடைய முப்பதாவது வயதிலிருந்து சினிமாவில் பணிபுரியத் தொடங்கிய ராமசுப்பு, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடனும் பணிபுரிந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.  'அன்னக்கிளி'யிலிருந்து மகாநதி, மௌனராகம், புன்னைகை மன்னன், அலைகள் ஓய்வதில்லை முதலான பல ஹிட் படங்களில் இவர் இளையராஜாவுடன் இணைந்து பணி புரிந்திருக்கிறார்.

தெலுங்கு சினிமாவிலும் கன்டசாலா உள்ளிட்ட முக்கிய இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்திருக்கிற ராமசுப்பு குடியரசுத் தலைவராக இருந்த நீலம் சஞ்சீவ் ரெட்டி, தமிழ்நாடு முதலைமச்சராக இருந்த ஜெயலலிதா ஆகியோரிடமிருந்து துறையில் சாதித்ததற்கான விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் 'மேகா' படத்துக்காக 'புத்தம் புது காலை' பாடலை இளையராஜா படமாக்கிய போதும் ராஜாவுடன் இருந்த ராமசுப்பு, 'அலைகள் ஓய்வதில்லை'யில் அந்தப் பாடலை ஷூட் செய்த நினைவுகளை பகிர்ந்திருந்தது நினைவிருக்கலாம்.

`நடித்தது ஒரே படம் ஆனால் அதன் தாக்கம்!' -சத்யஜித் ரேவின் முதல் குழந்தை நட்சத்திரம் துர்கா காலமானார்!

இயக்குநர் சத்யஜித் ரேவின் முதல் குழந்தை நட்சத்திரமான உமா தஷ்குப்தா இயற்கை எய்தியிருக்கிறார்.வங்க மொழி இயக்குநரான சத்யஜித் ரேவின் முதல் திரைப்படமான `பதர் பாஞ்சாலி' 1955-ல் வெளியானது. இன்றும் கொண்டாடப்ப... மேலும் பார்க்க

Amaran: குடிச்சிட்டு ரகளை பண்ணினேனா? `அமரன்' படத்தில் `சீன்' கட் ஆனது குறித்து ஶ்ரீகுமார்

சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற 'அமரன்' படத்தில் சீரியல் நடிகர்ஶ்ரீ குமாரும் நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள் எடிட்டிங்கில் கட் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

``அந்த ஷோவுல அவர் ஸ்கிரிப்ட் எல்லாருக்கும் பிடிச்சது...'' - எம்.ஜி.கன்னியப்பன் குறித்து கதிர்பாரதி

பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பல முகங்களைக் கொண்ட எம்.ஜி.கன்னியப்பன் திடீர் மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள் பலரும் இரங்கல... மேலும் பார்க்க