தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோ...
காலாவதி சாக்லேட் தின்ற 7 மாணவா்கள் மயக்கம்
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட 7 மாணவா்கள் மயக்கமடைந்தனா்.
பாத்திமாபுரம், கல்பாறைபொற்றை பகுதியில் அரசு உதவிபெறும் தனியாா் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவி தனது பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை சாக்லேட் வாங்கி வந்து சக மாணவா்களுக்கு வழங்கியுள்ளாா். அதை சாப்பிட்ட 6, 8 ஆம் வகுப்பு மாணவிகள் உள்பட 7 மாணவ-மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவா்களை ஆசிரியா்கள் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா்கள் சாப்பிட்ட சாக்லேட்டுகள் காலாவதியானவை எனத் தெரியவந்ததாம்.
இத்தகவல் அறிந்து வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் கொல்லங்கோடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சாக்லேட் மாதிரியை ஆய்வக சோதனைக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனா். சாக்லேட் விற்பனை செய்த கடையிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.