செய்திகள் :

காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கிறீர்களா? - ஆய்வில் முக்கியத் தகவல்!

post image

காலையில் எழுந்தவுடன் பலருக்கும் அந்த நாள் தொடங்குவது ஒரு டீ அல்லது காபியில்தான். டீ / காபி குடிப்பது நல்லதா? என்னென்ன நன்மைகள்? பாதிப்புகள் உள்ளனவா? என தொடர்ந்து ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது நல்லது என சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

காலையில் ஒரு கப் காபி குடிப்பது இதயத்திற்கு நன்மை தரும், ஆயுள் காலத்தை அதிகரிக்கும் எனக் கூறும் இந்த ஆய்வின் முடிவுகள் 'யுரோப்பியன் ஹார்ட் ஜர்னல்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் காபியின் அளவைவிட அதை எடுத்துக்கொள்ளும் நேரம் மிகவும் முக்கியமானது என்றும் கூறுகிறது.

அதாவது காபியில் உள்ள காஃபின் ஆரோக்கியத்திற்கு உதவும் என்றாலும் காபியில் அழற்சி எதிர்ப்புப் பொருள்கள் உள்பட உயிரியல் சேர்மங்களும் உள்ளன. எனவே, காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும்போது அது உடலுக்கு குறிப்பாக இதயத்திற்கு சில நன்மைகளை வழங்குகிறது. மற்ற நேரங்களில் குடிக்கும்போது அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்கிறது.

இதையும் படிக்க | சாப்பிட்டவுடன் டீ / காபி குடிக்கலாமா? - ஐசிஎம்ஆர் கூறுவது என்ன?

இந்த ஆய்வின்படி, 1999 முதல் 2018 வரை ஒருநாளில் வெவ்வேறு நேரங்களில் காபி குடிப்பவர்கள் சுமார் 40,000- க்கும் மேற்பட்டோரின் உடல்நிலையை கண்காணித்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 36% பேர் காலையில் காபி குடித்தனர், அதே நேரத்தில் 16% பேர் பிற்பகலில் குடித்தனர்.

இதில் காலையில் காபி குடித்தவர்கள், பிற நேரங்களில் காபி குடித்தவர்களைவிட ஆரோக்கியமாக இருந்தனர்.

காலையில் காபி குடிப்பவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு 16% குறைவதாகவும் 10 ஆண்டுகளில் இதய நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு 31% குறைவாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நாள் முழுவதும் காபி அருந்துபவர்கள், அதாவது நாள் ஒன்றுக்கு ஒருமுறைக்கு மேல் காபி அருந்துபவர்களின் இதய ஆரோக்கியம் மோசமானதாகவே இருந்தது. அவர்களின் இறப்பு விகிதம் குறையவில்லை.

பகலில் காபி குடிப்பதால் அது 'கிர்காடியன் ரிதம்' எனும் உடல் இயக்கத்தில் தலையிட்டு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம், இதனால் தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் சுரப்பில் மாற்றம் ஏற்பட்டு தூக்கமின்மைக்கு வழிவகுக்கலாம், ரத்த அழுத்தத்தை பாதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சாப்பிடக்கூடாதா? - நம்பிக்கையும் உண்மையும்!

அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள நியூ ஓர்லென்ஸ் துலேன் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் லு குய், 'நீங்கள் எவ்வளவு காபி குடிக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, எப்போது குடிக்கிறீர்கள் என்பதும் முக்கியம்' என்று கூறியுள்ளார்.

பொதுவாக உணவு வழிகாட்டுதல்களில் நேரத்தைப் பற்றி நாங்கள் அறிவுறுத்துவதில்லை, ஆனால் எதிர்காலத்தில் அதைப்பற்றி பரிசீலிக்க தேவையுள்ளது என்றார்.

லண்டனின் ராயல் பிராம்ப்டன் மற்றும் ஹேர்ஃபீல்ட் மருத்துவமனை இதய நோய் நிபுணர் பேராசிரியர் தாமஸ் லூசர், 'நாள் முழுவதும் காபி குடிப்பவர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர், தூக்கத்திற்கு முக்கியமான ஹார்மோனான மெலடோனின் சுரப்பை காபி குறைக்கிறது' என்று கூறியுள்ளார்.

காபி குடிக்காதவர்களைவிட ஒரு நாளைக்கு மூன்று கப் வரை காபி குடிப்பவர்களின் இதயம் ஆரோக்கியமானதாக இருக்கிறது எனவும் அதேநேரத்தில் உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்க ஒரு நாளைக்கு நான்கு கப் காபிக்கு மேல் உட்கொள்ளக்கூடாது என லண்டன் சுகாதார அமைப்பு கூறுகிறது.

மேலும், கர்ப்பிணிகள் எடை குறைவு மற்றும் கருச்சிதைவு அபாயங்களைக் குறைக்க ஒரு நாளைக்கு 200 மி.கிராமுக்கு மேல் காஃபின் உட்கொள்ளலைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறது. (ஒரு கப் காபியில் சுமார் 140 மி.கி. காஃபின் உள்ளது)

இறுதியாக, காலையில் காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என இப்போது பெரும்பாலான ஆய்வின் முடிவுகள் இருப்பதாகவும் அதனால் காலையில் உடல் ஆரோக்கியத்திற்காகவும் புத்துணர்ச்சிக்காகவும் ஒரு கப் காபி அருந்துங்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கண்பார்வையை இழந்த ஆஸ்கர் நாயகி!

ஜேம்ஸ்பாண்ட் நடிகை ஜூடி டென்ச் கண்பார்வையை இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ‘எம்’ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற இங்கிலாந்து நடிகை ஜுடி டென்ச் (91), தனது கண்பார்வை இழந்து ... மேலும் பார்க்க

ஆஸ்கர்: எமிலியா பெரெஸ் படம் 13 பிரிவுகளில் பரிந்துரை!

பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய எமிலியா பெரெஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பா... மேலும் பார்க்க

எனது குழந்தைகள் சினிமாவுக்கு வர நான் விரும்பவில்லை: ஷாகித் கபூர்

பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சியான ‘ஃபிகரிங் அவுட்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஹிந்தி நடிகர் ஹிந்தி நடிகர் ஷாகித் கபூர் தனது குழந்தைகள் சினிமாவில் நடிக்க தான் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.தொட... மேலும் பார்க்க

பிப். 4 முதல் 14 வரை மருதமலையில் தைப்பூச திருத்தேர் திருவிழா!

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருத்தேர் திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு இடங்களிலிருந்து... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்!

சின்ன திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் 5 இடங்களில் உள்ள தொடர்களில் 4 தொடர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன. சின்ன திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ஏராளமான ரசிகர்... மேலும் பார்க்க