'காலை 1.40-க்கு பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த குறிவைத்த பாகிஸ்தான்' - விவரித்த கர்னல் சோபியா குரேஷி
இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி பேசுலையில்.
"பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்கு எல்லைகளில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்காக அவர்கள் டிரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள், சுற்றித் திரியும் வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்கள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இந்தியா அந்த அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக தகர்த்துவிட்டது.
ஆனால், நேற்று இரவு பாகிஸ்தான் வான்வழியாக 26 இடங்களில் ஊடுருவ முயற்சித்தது. அவர்கள் உதம்பூர், புஜ், பதான்கோட், பதிண்டாவில் உள்ள நமது விமானப்படை தளங்களையும், நமது ஆயுதங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது மட்டுமே..!
பஞ்சாப் விமானப்படை தளங்களில் காலை 1.40 மணிக்கு உயர் வேக ஏவுகணை மூலம் குறிவைத்தனர். அவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றையும் தாக்கியுள்ளனர். இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் ஆகும்.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவத்தின் மீது மட்டுமே இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது.
இந்தியா தாக்குதல் நடத்தும் போது குறைந்த அளவு சேதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று இந்தியா கவனமாக உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதல்களை நடத்தினாலும், இந்தப் பதற்ற நிலையை குறைப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது" என்று பேசினார்.